தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ இந்த வாரம் எப்படி இருக்கும்?

 இந்த வாரம் எப்படி இருக்கும்?

 இந்த வாரம் எப்படி இருக்கும்?


ADDED : மே 11, 2026 02:35 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 11, 2026 02:35 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

டவுனு: என்ன நியுட்ரன் போனவாரம் ஒரு நாள் உங்க கை ஓங்கியிருந்துச்சு போல.

நியுட்ரன்: கொஞ்சம் அசந்தா என் கை அன்னைக்கு ஒடைஞ்சிருக்கும். அன்னைக்கு 198 பாயிண்ட் ஸ்விங் இருந்துச்சு. இறுதியில லைட்டா இறங்கி முடிஞ்சுச்சு.

டவுனு: இப்படி அங்கலாய்ச்சா எப்படி?

அப்பு: வார இறுதியில 178 புள்ளிகள் ஏற்றத்தோட முடிஞ்சாலும் வாராந்திர அளவுல 600 புள்ளிகள் ஸ்விங் இருந்துச்சு. வியாழக்கிழமை நானே கொஞ்சம் ஆடித்தான் போனேன். நியுட்ரனுக்கு கேக்கவா வேணும்.



நியுட்ரன்: கரெக்டா சொன்னீங்க. என்னதாங்க நடக்குது டவுனு.

டவுனு: பிப்ரவரி 27-க்கு பின்னாடி மே 8 வரைக்கும் நிப்டி 2,847 புள்ளிகள் இறங்கி அதுல 1,844 புள்ளிகள் ரெக்கவரியும் ஆயிடுச்சு. இன்னும் கிட்டத்தட்ட 1,000 புள்ளிகள் ரெக்கவரியாக வேண்டியதுதான் மீதமிருக்கு. மார்ச் 30 அன்னைக்கு வந்த 22,331-தான் ஆகக்குறைந்த அளவு. அதுக்கப்புறம் போன வெள்ளிக்கிழமை வரை இருந்த 25 நாட்களிலே 24,150-க்கு மேலே 11 நாளும் கீழே 14 நாளும் குளோசாயிருக்குது.

நியுட்ரன்: என்னதான் சொல்ல வர்றீங்க டவுனு

டவுனு: மீதமிருக்குற 1,000 புள்ளிகள் ரெக்கவரி ஆகறதுக்குத்தான் பிரம்மப்பிரயத்தனம் செய்யுது நிப்டி. ஏப்ரல் 21-ம் தேதி 24,576-ல நிறைவடைஞ்சது. அன்னைக்கு நிலைமைக்கு 600 புள்ளிகள்தான் ரெக்கவரி பாக்கி இருந்துச்சு. ஆனா இந்த கடைசி கட்ட ரெக்கவரிதான் நடக்கவே மாட்டேங்குது. அதுக்கப்புறம் மறுபடியும் இறங்கி 1,000 பாயிண்ட் ரெக்கவரி வரணுமுங்கிற நிலைமைக்கு வந்துடுச்சு.

அப்பு: மார்க்கெட்டுல இதெல்லாம் சாதாரணமப்பா!.

டவுனு: சாதாரணம்தான். இறங்குனது பூராவும் ரெக்கவரி ஆயிடுச்சுன்னா புதுத்தெம்பு வந்துடும்.

நியுட்ரன்: நீங்கதான் இறக்குனீங்க. இப்ப நீங்கதான் ஏறனுமுன்னு ஆசையும் படுறீங்க.

டவுனு: நான் பயப்படறது ஒரே ஒரு விஷயத்துக்குதாங்க. சைடுவேய்ஸ் மார்க்கெட் ஆயிடக்கூடாது. அது நம்ம மூனு பேருக்கும் நல்லதில்லை.

நியுட்ரன்: அதுவேனா கரெக்டுதான். என்னைக்காவது ஒரு நாள் நியுட்ரல் வந்தா ஓ.கே. நியுட்ரலே தொடர்ந்தா சிக்கல்தான்.

டவுனு: வர்ற வாரத்துல பண வீக்கம், மொத்தவிலை குறியீட்டு அளவில் பணவீக்கம், பயணியர் வாகன விற்பனை, ஏற்றுமதி இறக்குமதி நிகர நிலைமை போன்ற இந்த பொருளாதார தரவுகள் வெளிவர இருக்குது. பழைய வீடுகள் விற்பனை, பணவீக்கம், உற்பத்தியாளர்கள் விலை குறியீடு, ரீட்டெயில் சேல்ஸ், இண்டஸ்ட்ரீயல் புரொடக்ஷன் போன்ற அமெரிக்க பொருளாதார தரவுகள் வெளிவர இருக்குது.

அப்பு: நிப்டிக்கு வாராந்திர அளவில் 23,878/23,580/23,351-ல சப்போர்ட்டும், 24,478/24,780/25,009-ல ரெசிஸ்டென்ஸிம் இருக்குது.

நியுட்ரன்: ஐ! அப்ப இந்த வாரம் 25,000-த்த டச் பண்ணீடுமா?.

டவுனு: லெவலைச்சொன்னால் அது வருமான்னு கேட்டா என்ன அர்த்தம்.

நியுட்ரன்: ஒரு ஆசைதான்.

டவுனு: அளவா ஆசைப்படுங்க நியுட்ரன்.

நியுட்ரன்: வர்ற வாரம் எப்படி இருக்குமுன்னு நினைக்கிறீங்க அப்பு.

அப்பு: போன வாரம் குழப்பம் அதிகமா இருந்ததாலே எதிர்பார்ப்பே இல்லீங்க. வெறுத்துப்போச்சு.

டவுன்: என்ன அப்பு நீங்க இப்படி சொல்லீட்டிங்க. 1,000 பாயிண்ட் ஏறீட்டா அப்புறம் உங்க இராஜ்ஜியம்தானே.

அப்பு: இறங்க ஆரம்பிச்சு 19 நாள்ல மிகக்குறைந்த அளவை எட்டுச்சு. அதுக்கு பின்னாடி 25 நாளில 1,000 புள்ளிகள்தான் பாக்கி இருக்குன்ற நிலைமை வந்துடுச்சு. இந்த வாரத்தில ரெக்கவராயி வரலாற்றுல இடம் பிடிக்குமா இல்லை இறக்கம் தொடருமான்னு காத்திருந்துதான் பாக்கணும்.

டவுனு: என்ன இப்படி மனசு விட்டுட்டீங்க.

நியுட்ரன்: அப்ப வர்ற வாரம் எப்படியிருக்குமுன்னு நீங்க நினைக்கிறீங்கன்னு சொல்ல மாட்டீங்க.

அப்பு: பெரிசா சந்தையில வியாபாரம் பண்ணாட்டாலும் பட்டுன்னு பாயிண்ட்டை பிடிச்சுக்கிறீங்க நியுட்ரன்.

டவுனு: 'நியுட்ரன் எவ்ளோ பெரிய அனுபவஸ்தர். பொசுக்குன்னு இப்படி சொல்லீட்டீங்களே. பசிக்குது வாங்க லஞ்ச் சாப்பிடலாம்' என்று சொல்ல மூவரும் கிளம்பினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us