தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ இந்த வாரம் எப்படி இருக்கும்?

 இந்த வாரம் எப்படி இருக்கும்?

 இந்த வாரம் எப்படி இருக்கும்?


ADDED : ஜூன் 08, 2026 01:16 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 08, 2026 01:16 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நியுட்ரன்: சொன்னதை செய்துட்டீங்களே டவுனு

அப்பு: ஆமாம். தெளியவைச்சு தெளியவைச்சு அடிச்சுட்டீங்க

டவுனு: எப்பவும் நான் சொல்றதுதான். வாய்ப்பு கிடைச்சா சந்தையில முழுமையா உபயோகிச்சுக்கிடனும்

அப்பு: இடையில நியுட்ரனுக்கும் ஒரு சான்ஸ் வேற

நியுட்ரன்: ரொம்ப நாளைக்கு அப்புறம் எனக்கு கிடைச்ச வாய்ப்பு

டவுனு: இந்த வாரம் எல்லாருக்குமே வாய்ப்பு இருந்துச்சு

நியுட்ரன்: ஆமாம். போனவாரம் சராசரியா தினசரி ஹை-லோவுக்கு நடுவே 292 புள்ளிகள் இருந்துச்சு. இதுக்கு மேல வியாபாரத்திற்கான வாய்ப்பு எப்ப கிடைக்கும்

அப்பு: யார் எதை சொல்றதுன்னே இல்லாம போயிடுச்சுங்க

நியுட்ரன்: பணவீக்க விகிதம், வங்கிகளில் உள்ள டிபாசிட் மற்றும் அவை வழங்கிய கடன்களின் அளவில் வளர்ச்சி, 'எம்3' பணப்புழக்கம், அன்னிய செலவாணி கையிருப்பு போன்ற இந்திய பொருளாதார தரவுகள் வர்ற வாரம் வெளிவர இருக்குது.

வீடுகள் விற்பனை, பணவீக்கம், உற்பத்தியாளர்களின் விலை குறியீடு, வேலையில்லாத நபர்களின் எண்ணிக்கை, மிச்சிகன் நுகர்வோர் மனநிலை போன்ற அமெரிக்க பொருளாதரம் சார்ந்த தரவுகள் வர்ற வாரம் வெளிவர இருக்குது

டவுனு: 23,100/22,835/22,610ல வாராந்திர அளவிலான சப்போர்ட்டும், 23,685/24,000/24,225ல வாராந்திர அளவிலான ரெசிஸ்டென்ஸும் இருக்குது

நியுட்ரன்: எனக்கு ஒரு டவுட்

அப்பு: என்ன? வர்ற வாரம் எப்படி இருக்குமுன்னா?

நியுட்ரன்: அது இல்லீங்க. எப்பத்தான் நிப்டி 25,000ஐ தொடும்?

டவுனு: என்ன இப்படி கேட்டுட்டீங்க?

அப்பு: வர்த்தக நாட்களின் இறுதி நிலவர அடிப்படையில பார்த்தா நிப்டி மார்ச் 1ம் தேதியில இருந்து இறங்க ஆரம்பிச்சு 19 நாட்களில 2,847 புள்ளிகள் இறங்கி 22,331க்கு வந்துச்சு. அதுக்கப்புறம் 13 நாட்களில் 2,245 புள்ளிகள் ஏறி 24,576க்கு வந்துச்சு. அதுக்கப்புறம் 31 நாளா 23,366க்கும் 24,378க்கு இடையிலேயே ஊசலாடுது

டவுனு: ஊசலாட்டம் என்ன ஊசலாட்டம். இந்த 31 நாள்ல 1,209 புள்ளிகள் இறங்கியிருக்குது

அப்பு: பழைய லெவலுக்கு போக இன்னும் 1,811 புள்ளிகள் ஏற்றம் வரணும்

நியுட்ரன்: எப்ப 25,000 வருமுன்னு கேட்டா இறங்குன வரலாற்றையும் இன்னும் எவ்வளவு ஏற்றம் வரணுமுன்னு கணக்கையும் சொல்றீங்களே. இது நியாயமா?

டவுனு: கணிக்க முடியாதப்ப புள்ளி விபரத்தை சொல்லி தப்பிச்சுக்கணும். இல்லையா அப்பு

நியுட்ரன்: இவ்வளவு பேசறீங்களே. நீங்க என் கேள்விக்கு பதிலை சொல்லுங்க

டவுனு: அது தெரிஞ்சா நான் ஏன் உங்க கிட்ட பேசிக்கிட்டு இருக்கப்போறேன்

நியுட்ரன்: என்ன இப்படி பொசுக்குன்னு சொல்லீட்டீங்க

அப்பு: பின்ன என்னங்க. எப்ப 25,000த்துக்கு மேலே போவுமுன்னு பக்காவா தெரிஞ்சா வியாபாரம் பண்ணீட்டு போயிடுவோமுல்ல. இங்க வந்து ஏன் குழுமுறோம்

நியுட்ரன்: அது சரிதான்

டவுனு: நீங்க வர்ற வாரத்துக்கான உங்க கணிப்பை சொல்லுங்க நியுட்ரன்

நியுட்ரன்: வீக்காத்தான் இருக்க வாய்ப்பு இருக்கு. ரேஞ்ச் பவுண்டாவே இருந்துடக்கூடும்

டவுனு: ரேஞ்சுன்னா. மைனஸ் 500க்கும் பிளஸ் 500க்கும் இடையே இருந்தாலும் ரேஞ்சுதான்

அப்பு: நியுட்ரன் அவருக்கு சாதகமாகவே பேசுறாரு. வாலட்டைலிட்டி அதிகமா இருக்க வாய்ப்பிருக்கு. அதிலும் வாரத்தின் ஆரம்பத்தில்

டவுனு: என் கணிப்புப்படி வேகமான இறக்கம் வந்து மீளத்தான் வாய்ப்பிருக்கு

நியுட்ரன்: அன்றாடம் எப்படி வேணா இருக்கட்டும். வாராந்திர ரீதியா நியுட்ரல் ஆயிட்டா சரி

டவுனு: இதுக்கான வாய்ப்பு கொஞ்சம் பிரகாசமா இருக்குது. இதுல நம்ம ரெண்டுபேரு வியூவும் ஒன்னா இருக்கறதால நான் உங்களுக்கு இன்றைக்கு 'ட்ரீட்' தர்றேன் என்று சொல்ல மூவரும் ஒரு ரெஸ்ட்டாரென்டை நோக்கி நடந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us