தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/இந்த வாரம் எப்படி இருக்கும்?

இந்த வாரம் எப்படி இருக்கும்?

இந்த வாரம் எப்படி இருக்கும்?


UPDATED : அக் 19, 2026 02:12 AM

ADDED : அக் 18, 2026 09:26 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 19, 2026 02:12 AM ADDED : அக் 18, 2026 09:26 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'முக்கிய திருப்பு முனை லெவல் 22,861 ஆக இருக்கும்'

நியுட்ரன்: வணக்கம் அப்பு. என்னவோ வாய்ப்பே கிடைக்காதோன்னு புலம்புனீங்க. போன வாரம் ஜமாய்ச்சுட்டீங்களே!

அப்பு: வாய்ப்பு கிடைச்சா முழுமையா உபயோகிச்சுக்கணும்.

நியுட்ரன்: எப்படியோ என்னை முழுசா வேடிக்கை பார்க்க வச்சுட்டீங்க.

அப்பு: வேற வழியில்லைங்க நியுட்ரன்.

டவுனு: நாங்க இரண்டு பேரும் பலத்தை நிரூபிக்க போட்டி போடற இடத்துல நீங்க அமைதியாத்தான் இருக்கணும்.

நியுட்ரன்: அமைதியென்ன அமைதி. பதுங்கியே இருந்தேன்னா பார்த்துக்குங்களேன்.

அப்பு: வர்ற வாரமும் பதுங்கவேண்டித்தான் இருக்குமுன்னு நினைக்கிறேன்.



நியுட்ரன்: இது வேறயா? வர்ற வாரத்துல 'இன்ப்ரஸ்ட்ரக்சர் அவுட்புட், ஹெச்.எஸ்.பி.சி.,' வெளியிடும் உற்பத்தி மற்றும் சேவை நிறுவனங்களின் கொள்முதல் மேலாளர்களின் குறியீடு மற்றும் அன்னிய செலாவணி கையிருப்பு போன்ற நாட்டின் பொருளாதாரம் சார்ந்த தரவுகள் வெளிவர இருக்குது.

வழங்கப்பட்ட கட்டிட அனுமதிகள், விற்கப்படாமல் நிலுவையில் உள்ள வீடுகளின் விற்பனை ஒப்பந்தங்கள், எஸ் அண்டு பி., குளோபல் வெளியிடும் உற்பத்தி மற்றும் சேவை நிறுவனங்களின் கொள்முதல் மேலாளர்களின் குறியீடு மற்றும் மிச்சிகன் நுகர்வோர் நம்பிக்கை குறியீடு போன்ற அமெரிக்க பொருளாதாரம் சார்ந்த தரவுகள் வெளிவர இருக்கின்றன.

டவுனு: செவ்வாய்கிழமை சந்தைக்கு விடுமுறை. மறந்துடாதீங்க.

அப்பு: நியுட்ரன், வர்ற வாரம் எப்படி இருக்குமுன்னு உங்க கணிப்பை சொல்லுங்க.

நியுட்ரன்: நிப்டி போன வாரம் 625 புள்ளிகள் ஏற்றம் கண்டிருக்குது. மேலெழுந்தவாரியா பார்த்தா ஸ்ட்ராங்கான ரெக்கவரியாத்தான் தெரியுது. கொஞ்சம் டீப்பா நிப்டியில இருக்குற நிறுவனங்கள் அடிப்படையில பார்த்தா ஐ.டி., நிறுவன பங்குகள் கடந்த 5 மற்றும் 22 நாள் அளவீட்டுல ஏற்றம் கண்டிருக்குது.

தவிர ஒரு சில பிரைவேட் செக்டார் பேங்குகள் இந்த இரண்டு கால அளவீட்டிலேயும் ஏற்றம் கண்டிருக்குது. ஆட்டோ செக்டார் ஸ்டாக்குகள் 5 நாள் அளவீட்டில ஏற்றத்தையும், 22 நாள் அளவீட்டில இறக்கத்தையும் சந்திச்சிருக்குது. ஒரு சில எப்.எம்.சி.ஜி., பங்குகள் 5 நாள் மற்றும் 22 நாள் அளவீட்டில் வீக்காத்தான் இருந்திருக்கு.

டவுனு: என்ன சொல்ல வர்றீங்க நியுட்ரன்?

நியுட்ரன்: நிப்டியில வந்திருக்குற ரெக்கவரி பரவலா இல்லைங்கிறதைத்தான்.

அப்பு: எப்பவும் நிப்டி ஏற்றம் காண்கிற போது எல்லா ஸ்டாக்கும் ஏற்றம் காண்பதில்லை. இதைப்போய் பெருசா சொல்றீங்களே.

டவுனு: ஒரே திசையிலே போகும் போது நீங்க சொல்றமாதிரி இதை பெருசா எடுத்துக்க வேண்டியது இல்லை. ஆனா வேகமான வீழ்ச்சிக்கு அப்புறம் வர்ற ஏற்றத்துல இதை அவசியம் பார்க்கணும் அப்பு.

நியுட்ரன்: வெறுமனே நிப்டியோட நகர்வை வைத்து பார்த்தீங்கன்னா ஸ்ட்ராங் ரெக்கவரி மாதிரி தெரியும். அதுவும் 16-ம் தேதி நிப்டி வாராந்திர உச்சத்திற்கு அருகே நிறைவடைஞ்சிருக்கறதை நாம பாசிட்டிவான ஒரு விஷயமா எடுத்துக்கலாம்.

நம்ம கேள்வி இந்த ரெக்கவரி தொடருமாங்குறதுதான். இந்த ஆங்கிள்ள பார்த்தா 13 மற்றும் 15 தேதிகளில இருந்த டெய்லி ரேஞ்சை (அதிகம்-குறைவுக்கு இடையே இருந்த வித்தியாசம்) விட 16-ம் தேதி இருந்த ரேஞ்ச் குறைவா இருந்துச்சு. இதனால ஏற்றம் தொடர்ந்தாலும் முந்தைய இரண்டு நாட்களை போல வலுவான நகர்வு இல்லாத மாதிரி தெரியுது.

டவுனு: வரவர நியூட்ரனோட அனாலிசிஸ் ரொம்ப நுணுக்கமாயிட்டே போகுது.

நியுட்ரன்: சந்தையில வாய்ப்பில்லை. அதனால டீப்பா அனலைஸ் பண்றேன். இதைப்போயி பெருசா சொல்லிகிட்டு. நிப்டிக்கு 22,573/22,000/21,671 போன்ற லெவல்களிலே வாராந்திர ரீதியிலான சப்போர்ட்டும், 23,425/23,723/24,052 போன்ற லெவல்களிலே வாராந்திர ரீதியிலான ரெசிஸ்டென்ஸும் இருக்குது. 22,861-தான் வாராந்திர அளவுல மேலேயா கீழேயாங்குறதை முடிவு செய்யற முக்கிய திருப்பு முனை லெவலா இருக்கும்.

டவுனு: ஏங்க சப்போர்ட் ரெசிஸ்டென்ஸ் ரொம்ப பெரிய வித்தியாசத்தோட இருக்குது.

நியுட்ரன்: போன வாரம் நிப்டி கண்ட வேகமான ரெக்கவரியும், வாராந்திர அதிகத்துக்கும் குறைவுக்கும் இடையிலான 861 புள்ளிகள் வித்தியாசம்தான் இப்படி இருக்கறதுக்கு காரணம்.

அப்பு: கணக்கை சொல்லீட்டீங்க. கணிப்பை சொல்லுங்க நியுட்ரன்.

நியுட்ரன்: போனவாரம் கண்ட ரெக்கவரிக்கு பின்னால் இனி செய்திகளுக்கு ஏற்றால் போல் மட்டுமே நிப்டியோட பயணம் இருக்கும்.

அப்பு: உங்க கணிப்பு என்ன டவுனு?

டவுனு: நியுட்ரன் சொன்ன பின்னாடி அப்பீலே இல்லை. ஏற்றமோ இறக்கமோ இது மாதிரி பெரிய அளவுல நடந்த பின்னாடி செய்திகளுக்கு அதிக முக்கியத்துவம் கிடைக்கும்.

நியுட்ரன்: என்னைய விட பெரிய அனுபவஸ்தரால்ல இருக்காரு.

டவுனு: உங்க அனுபவம் வேடிக்கை பார்க்கறதுல. எங்க அனுபவம் வியாபாரம் பண்றதுல.

நியுட்ரன்: எனக்கும் ஒரு காலம் வரும். அப்ப நான் யாருன்னு காண்பிப்பேன்.

டவுனு: வரும் வரும். அடுத்த 30 வருஷத்துல ஒரு நாள் வரும்!

நியுட்ரன்: வரத்தான் போகுது. நீங்க பார்க்கத்தான் போறீங்க டவுனு.

டவுனு: சவால் விட்டது போதும். பக்கத்துல ஒரு நல்ல சான்ட்விட்ச் கடை இருக்குது. ஏதாவது சாப்பிடலாம் என்று சொல்ல மூவரும் கடையை நோக்கி கிளம்பினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us