
அப்பு: வாங்க நியூட்ரன். என்ன நீங்களும் டவுனு பக்கம் சேர்ந்துட்டீங்க போல. 25,725-க்கு கீழே போனா எச்சரிக்கைன்னு சொல்லீட்டு போனீங்க. அதை தாண்டி இறங்கி, போன வாரம் 24,654 வரை கிட்டத்தட்ட 672 புள்ளிகள் சரிஞ்சிடுச்சே!?
டவுனு: தொடர்ந்து ஆறு நாளா இறங்குது. எங்க போய் நிக்குமோன்னு தெரியல. நான் எதிர்பார்த்ததை விட மோசமான இறக்கமா போயிடுச்சு.
நியூட்ரன்: வீக்கா இருந்த சந்தையை, பார்மா துறைக்கு வரி போடப்போறோமுன்னு அமெரிக்க ஜனாதிபதி சொன்னதை சாக்கா வச்சு, சரிச்சுப்புட்டாங்க.
டவுனு: வீக்கு சாக்குன்னு எல்லாம் ரைமிங்காத்தான் பேசுறீங்க. வர்ற வாரம் என்னென்ன சம்பவங்கள் இருக்குன்னு சொல்லுங்க, கேட்போம்.
நியூட்ரன்: முக்கியமான நிகழ்ச்சி, ரிசர்வ் வங்கியோட வட்டி அறிவிப்பு வர இருக்கிறது தான். தேசிய பங்கு சந்தையில செப்டம்பர் எப். அண்டு ஓ., கான்ட்ராக்ட் எக்ஸ்பைரி செவ்வாய்க்கிழமை நடக்கப் போவுது. அதையும் மனசுல வச்சுக்கிடணும்.
மத்தபடி, இண்டஸ்ட்ரீயல் புரொடக்ஷன், மேனுபேக்சரிங் புரொடக்ஷன், எச்.எஸ்.பி.சி., உற்பத்தி நிறுவனங்களின் பி.எம்.ஐ., குறியீடு இது மாதிரியான இந்தியா சம்பந்தப்பட்ட பொருளாதார தரவுகள் வெளிவர இருக்கு. ஒரு நாள் சந்தைக்கு விடுமுறையும் இருக்குது.
வேலைவாய்ப்புகள் மற்றும் தொழிலாளர் மாறுதல் கணக்கீடு, ஐ.எஸ்.எம்., உற்பத்தி நிறுவனங்களின் பி.எம்.ஐ., குறியீடு, வேலையில்லா திண்டாட்டம் இது மாதிரியான அமெரிக்க பொருளாதாரம் சார்ந்த தரவுகளும் வர இருக்குது.
டவுனு: அது சரி. அப்ப செவ்வாய்க்கிழமை வரைக்கும் இறக்கம் தொடரும்ங்கிற மாதிரி நிலைமை தான் இருக்குமோ?
அப்பு: வட்டி விகித முடிவுகள் சாதகமாக இருந்தால், ஏற ஆரம்பிச்சுடுங்க.
நியூட்ரன்: போனவாரம் போட்ட போடுக்கு அவ்வளவு சீக்கிரம் ஏறிடுமா என்ன?
அப்பு: ஒரு சின்ன ரிவர்சலாவது வரணுமுல்ல! வேணா பாருங்க. எப். அண்டு ஓ., எக்ஸ்பைரிக்கு அப்புறம் ஏறப்போகுதுன்னு தான் எனக்கு என்னவோ தோணுது.
டவுனு: அமெரிக்கா சைடுல அமைதியா இருந்தா, 'ரிவர்சல்' வர வாய்ப்பு இருக்கு. ஏற்றம் வரணுமுன்னா மொதல்ல 24,720-ஐ தாண்டி நிப்டி ஏற வேண்டியிருக்கும்.
நியூட்ரன்: 24,565, 24,475 அப்புறம் 24,385 அப்படிங்கிற அளவுல ஆதரவும்; 24,805, 24,955 அப்புறம் 25,050 அப்படிங்கிற தடுப்பும் இருக்க வாய்ப்பு இருக்கு. மொத்தத்துல ஒரு தெளிவில்லாத குழப்பமான சூழ்நிலை தான் நிலவுது.
டவுனு: டெக்னிக்கலா பார்த்தா, நிப்டியின் 200 நாள் இ.எம்.ஏ-.,வான 24,400-ல் ஒரு நல்ல ஆதரவு கிடைக்க வாய்ப்பு இருக்கு. அதுக்கு கீழே போனா சிக்கல் தான்.
அப்பு: சரி, என்னதான் சொல்ல வர்றீங்க? ஏற்றம் வருமா; வராதா?
டவுனு: அப்பு, எங்க கைதான் ஓங்கியிருக்கு. நீங்க நினைக்கிற ஏற்றம் வர்றதுக்கு நிறைய விஷயம் கைகூடி வரணும். இந்த வாரம் அது சாத்தியமில்லாமல் போறதுக்கு தான் டெக்னிக்கலா வாய்ப்பு அதிகமா இருக்கு.
டவுனு சொன்னதைக் கேட்டதும், அப்பு சைலண்டா கிளம்ப, நியூட்ரன் டவுனுக்கு ஒரு சல்யூட்டை போட்டுவிட்டு புறப்பட்டார்.