ஐ.சி.ஐ.சி.ஐ., புரூடென்ஷியல் 2 பண்டு திட்டங்கள் நிறுத்தம்
ஐ.சி.ஐ.சி.ஐ., புரூடென்ஷியல் 2 பண்டு திட்டங்கள் நிறுத்தம்
ADDED : ஜன 26, 2026 01:51 AM
செ பி வெளியிட்டுள்ள, 'பண்டு ஆப் பண்டு' தொடர்பான புதிய விதிமுறைகளுக்கு பொருந்தாத காரணத்தால், இரண்டு பண்டு திட்டங்களில் புதிய முதலீடுகள் பெறுவதை நிறுத்துவதாக, 'ஐ.சி.ஐ.சி.ஐ., புரூடென்ஷியல் அசெட் மேனேஜ்மென்ட்' நிறுவனம் அறிவித்துள்ளது.
இதன்படி, 'ஐ.சி.ஐ.சி.ஐ., புரூடென்ஷியல் பேசிவ் மல்டி அசெட் பண்டு, ஐ.சி.ஐ.சி.ஐ., புரூ டென்ஷியல் குளோபல் அட்வாண்டேஜ் பண்டு' ஆகிய இரண்டு திட்டங்களிலும், நாளை முதல் எஸ்.ஐ.பி., எஸ்.டி.பி., மற்றும் ஐ.டி.சி.டபுள்யு., மறு முதலீடு வசதிகள் நிறுத்தப்படுகின்றன.
ஏற்கனவே முதலீடு செய்துள்ள முதலீட்டாளர்கள் கவலைப்பட தேவையில்லை என்றும், எப்போது வேண்டுமானாலும் பணத்தை திருப்பி எடுத்துக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 2029 ஜனவரி வரை மூன்று ஆண்டுகளுக்கு இத்திட்டங்கள் செயல்படும்.
இதன் பின் இவை வேறொரு திட்டத்துடன் இணைக்கப்படும் அல்லது முழுமையாக மூடப்பட்டு பணம் செட்டில் செய்யப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

