ADDED : பிப் 06, 2026 03:32 AM

ஐ .சி.எல்., பின்கார்ப் நிறுவனத்தின் புதிய 'பாதுகாப்பு கொண்ட, மீட்கத்தக்க, பங்குகளாக மாற்ற முடியாத கடன் பத்திரங்கள்' வெளியீடு நேற்று துவங்கியுள்ளது.
இது தொடர்பாக, இந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
ஐ.சி.எல்., பின்கார்ப் நிறுவனத்தின் இந்த புதிய கடன் பத்திரங்களில் முதலீடு செய்ய விரும்புபவர்கள், வரும் பிப்ரவரி 18ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இதில், குறைந்தபட்சமாக 10,000 ரூபாய் முதலீடு செய்யலாம். 13, 24, 36, 60 மற்றும் 72 மாத அவகாசங்களில், மாதாந்திர, வருடாந்திர மற்றும் கூட்டு வட்டிக்கான வாய்ப்புகள் உள்ளன. வட்டி விகிதம் 10 -- 12.25 சதவீதம் வரை இருக்கும்.
இந்த வெளியீடு வாயிலாக பெறப்படும் தொகை, நிறுவனங்களின் வளர்ச்சி திட்டங்களை ஆதரிக்கவும், வாடிக்கையாளர்கள் மற்றும் பங்குதாரர்களுக்கு வழங்கப்படும் சேவைகளின் தரத்தை உயர்த்தவும் பயன்படுத்தப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

