உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : ஏப் 08, 2026 12:22 AM

அ நிறம் | அளவு
'ஐ .சி.எல்., பின்கார்ப்' நிறுவனம், 100 கோடி ரூபாய் மதிப்பில், பங்குகளாக மாற்ற முடியாத கடன் பத்திரங்களை வெளியிட்டு, முதலீட்டாளர்களிடம் இருந்து நிதி திரட்ட முடிவு செய்திருக்கிறது.
இந்த என்.சி.டி., வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட, அந்நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் கே.ஜி.அனில்குமார் கூறியதாவது:
“இது எங்களின் 9வது என்.சி.டி., வெளியீடு; இதன் வாயிலாக திரட்டப்படும் நிதியை முழுதும் தங்க நகை கடன் கொடுப்பதற்கு மட்டுமே பயன்படுத்த திட்டமிட்டிருக்கிறோம். அதனால் முதலீட்டாளர்களின் பணம் பாதுகாப்பாக இருக்கும்''.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
