நிர்மலா சீதாராமன் அறிவிப்பால் 'ஐ.டி.பி.ஐ., பேங்க்' ஏற்றம்
நிர்மலா சீதாராமன் அறிவிப்பால் 'ஐ.டி.பி.ஐ., பேங்க்' ஏற்றம்
ADDED : ஏப் 25, 2026 12:17 AM

'ஐ . டி.பி.ஐ., பேங்க்' பங்குகளை விற்பனை செய்யும் நடவடிக்கை தொடரும் என்கிற, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் அறிவிப்பை தொடர்ந்து, நேற்று ஒரே நாளில் இந்நிறுவன பங்கு ஒன்றின் விலை 8 சதவீதத்துக்கு மேல் அதிகரித்தது.
அதாவது, நேற்றைய வர்த்தகத்துக்கு இடையில் 72.37 ரூபாய் வரை சரிந்த பங்கு விலை, அமைச்சரின் அறிவிப்பிற்கு பின் திடீரென அதிகரித்து 79.98 ரூபாயை தொட்டது. வர்த்தக முடிவில் 3.32 சதவீத ஏற்றத்துடன் 76.18 ரூபாய்க்கு நிறைவடைந்தது.
முக்கிய தகவல்கள் 'ஐ.டி.பி.ஐ.,' வங்கியின் மொத்த பங்குகளில், மத்திய அரசு (45.48%) மற்றும் 'எல்.ஐ.சி.,' (49.24%) ஆகிய இரு தரப்பும் இணைந்து 94.72 சதவீத பங்குகளை வைத்துள்ளன
இதில் அரசின் 30.48 சதவீதம் மற்றும் 'எல்.ஐ.சி.,'யின் 30.24 சதவீதம் என மொத்தம் 60.72 சதவீத பங்குகளை விற்பனை செய்ய திட்டமிடப்பட்டது
கடந்த பிப்., மாதம் இதற்கான நிதி ஏலம் நடைபெற்ற நிலையில், இப்பங்கு விற்பனை நடவடிக்கை தொடரும் என நிதியமைச்சர் தற்போது உறுதி அளித்துள்ளார்
கடந்த ஓராண்டாக சுணக்க நிலையில் இருந்த இந்த பங்குகள், தற்போது மீண்டு வருவது முதலீட்டாளர்கள் இடையே நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
