டெக்னிக்கல் அனாலிசிஸ்: ஏற்றம் தொடர்ந்தால் 25,850 வரை சென்று திரும்பலாம்
டெக்னிக்கல் அனாலிசிஸ்: ஏற்றம் தொடர்ந்தால் 25,850 வரை சென்று திரும்பலாம்
UPDATED : ஜன 17, 2026 07:32 AM
ADDED : ஜன 17, 2026 01:25 AM

ஆரம்பத்தில் சிறிது ஏற்றத்தில் துவங்கி, 11 மணியளவில் உச்சம் தொட்டு, பின் கொஞ்சம் கொஞ்சமாக இறங்கி, நாளின் இறுதியில் 28 புள்ளிகள் ஏற்றத்துடன் நிப்டி நிறைவடைந்தது. பரந்த சந்தை குறியீடுகள் 16-ல், 9 குறியீடுகள் ஏற்றத்துடனும்; 7 குறியீடுகள் இறக்கத்துடனும் நிறைவடைந்தன. 
இவற்றில் 'நிப்டி மிட்கேப் 50' குறியீடு அதிகபட்சமாக 0.54 சதவிகித ஏற்றத்துடனும்; 'நிப்டி ஸ்மால் கேப் 250' குறியீடு அதிகபட்சமாக 0.47 சதவிகித இறக்கத்துடனும் நிறைவடைந்தன. 19 துறை சார்ந்த குறியீடுகளில், 9 குறியீடுகள் ஏற்றத்துடனும்; 8 குறியீடுகள் இறக்கத்துடனும் நிறைவடைந்தன. நிப்டி ஐ.டி., குறியீடு, அதிகபட்சமாக 3.34 சதவிகித ஏற்றத்துடனும், 'நிப்டி பார்மா' குறியீடு அதிகபட்சமாக 1.28 சதவிகித இறக்கத்துடனும் நிறைவடைந்தன.

வர்த்தகம் நடந்த 3,270 பங்குகளில், 1,338 ஏற்றத்துடனும்; 1,828 இறக்கத்துடனும்; 104 மாற்றம் ஏதும் இன்றியும் நிறைவடைந்திருந்தன. டெக்னிக்கலாக நிப்டியின் நடுத்தரகால நிலை ஏற்றத்தை காண்பிக்கும் போதிலும், குறுகிய காலத்தில் கரெக்ஷனில் இருப்பதைப் போன்ற தோற்றமே நிலவுகிறது.
மொமெண்டம் மற்றும் ஆர்.எஸ்.ஐ., போன்றவை பலகீனம் தொடரலாம் என்பதையே காட்டுகிறது. தற்போதைக்கு 25,500 என்பது நல்லதொரு சப்போர்ட்டாக இருக்கிறது. ஏற்றம் தொடர்ந்தால் 25,850- - 25,900 வரை சென்று திரும்பலாம்.

