உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : மே 07, 2026 03:15 AM

அ நிறம் | அளவு
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிந்ததை தொடர்ந்து, நேற்று, இந்திய அரசு பத்திரங்களின் மதிப்பு அதிகரித்தது.
கச்சா எண்ணெய் விலை குறைந்ததால், இந்தியாவின் பணவீக்கம் குறையும் என்ற நம்பிக்கையில் முதலீட்டாளர்கள் அதிகளவில் பத்திரங்களை வாங்கினர். பொதுவாக, கடன் பத்திரங்களின் மதிப்பு உயர்ந்தால், அதன் வருவாய் குறையும். இதன்காரணமாக, 10 ஆண்டு கால அளவிலான அரசு பத்திரங்களின் வட்டி விகிதம் 7.01 சதவீதத்தில் இருந்து 6.98 சதவீதமாக குறைந்தது.
வரும் வெள்ளிக்கிழமை அன்று, மத்திய அரசு 34,000 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய 10 ஆண்டு கால பத்திரங்களை ஏலம் விட உள்ளது. இது சந்தையின் அடுத்தக்கட்ட நகர்வை தீர்மானிக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
