UPDATED : ஏப் 11, 2026 11:01 PM
ADDED : ஏப் 11, 2026 10:58 PM

பெங்களூரு:கடந்த 2025 - 26 நிதியாண்டில், ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கான முதலீட்டு வரவில் இந்தியா உலகளவில் 4வது இடத்தை தக்கவைத்துள்ளது.
இது குறித்து சந்தை ஆய்வு தளமான 'டிராக்ஸன்' வெளியிட்டுள்ள அறிக்கை:
கடந்த நிதியாண்டில் இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் திரட்டிய முதலீடு கிட்டத்தட்ட 1.08 லட்சம் கோடி ரூபாய். இது, அதற்கு முந்தைய 2024 - 25ம் நிதியாண்டில் திரட்டப்பட்ட, 1.32 லட்சம் கோடி ரூபாயுடன் ஒப்பிடுகையில் 18 சதவீத சரிவாகும்.
இருப்பினும், உலக அளவில் அதிக முதலீட்டை ஈர்த்த நாடுகளில் அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் சீனாவுக்கு அடுத்தப்படியாக இந்தியா 4வது இடத்தை தக்கவைத்து கொண்டுள்ளது. ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகளை விட இந்தியா ஸ்டார்ட் அப் முதலீட்டில் முன்னிலையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
2025 - 26ம் நிதியாண்டில் ஒட்டுமொத்த முதலீடு குறைந்தாலும், ஆரம்ப நிலை நிறுவனங்கள் மீதான முதலீட்டாளர்களின் நம்பிக்கை 33 சதவீதம் அதிகரித்துள்ளது. இது ஸ்டார்ட் அப் சூழல் ஆரோக்கியமாக இருப்பதையே காட்டுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
![]() |

