தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/அமெரிக்க தொழில்நுட்ப பங்குகள் சரிவால் இந்திய மியூச்சுவல் பண்டுகளுக்கு அழுத்தம்

அமெரிக்க தொழில்நுட்ப பங்குகள் சரிவால் இந்திய மியூச்சுவல் பண்டுகளுக்கு அழுத்தம்

அமெரிக்க தொழில்நுட்ப பங்குகள் சரிவால் இந்திய மியூச்சுவல் பண்டுகளுக்கு அழுத்தம்


UPDATED : நவ 22, 2026 03:34 AM

ADDED : நவ 22, 2026 03:33 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 22, 2026 03:34 AM ADDED : நவ 22, 2026 03:33 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அமெரிக்க பங்கு சந்தையில் தொழில்நுட்ப துறை பங்குகள் கடும் விற்பனை

அழுத்தத்தை சந்தித்து வருகின்றன. கடந்த அக்டோபர் 1 முதல் நவம்பர் 18 வரையிலான காலகட்டத்தில், 'டெக்' பங்குகள் நிறைந்த அமெரிக்காவின் 'நாஸ்டாக் காம்போசிட்' குறியீடு கிட்டத்தட்ட ஒன்பது சதவீதம் சரிந்துள்ளது.

இந்த சூழலில், இந்திய மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள் அமெரிக்க டெக் பங்குகளில் ஏற்கனவே செய்துள்ள முதலீடுகளின் நிலை குறித்து முதலீட்டாளர்கள் பதற்றப்படுகிறார்கள்.

கடந்த அக்டோபர் 31ம் தேதி நிலவரப்படி, 11 இந்திய மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள் அமெரிக்க டெக் பங்குகளில் மொத்தம் 27,938 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளன. இதில் பி.பி.எப்.ஏ.எஸ்., மோதிலால் ஓஸ்வால் மற்றும் எஸ்.பி.ஐ. மியூச்சுவல் பண்டுகள் அதிக மதிப்பிலான முதலீடுகளை கொண்டுள்ளன.

பதற்றப்படாதீர்கள்

சர்வதேச முதலீடுகளுக்கு செபி விதித்துள்ள உச்சவரம்பு காரணமாக, இவற்றில் பல பண்டுகளில் ஏற்கனவே புதிய முதலீடுகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

அமெரிக்க டெக் நிறுவனங்கள் நீண்ட கால அடிப்படையில் வலுவான அடிப்படைகளை கொண்டிருப்பவை என்பதால், குறுகிய கால சரிவைப் பார்த்து பதற்றப்பட்டு முதலீடுகளை திரும்ப பெறுவது நஷ்டத்தை உறுதி செய்வதாக அமைந்துவிடும்.

தற்போது அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வலுவடைந்து வருவதும், வெளிநாட்டு மியூச்சுவல் பண்டுகளின் என்.ஏ.வி., சற்று குறைத்து காட்டக்கூடும்.

உங்களது மொத்த முதலீட்டில் சர்வதேச பங்குகளின் பங்கு 10 முதல் 15 சதவீதத்திற்குள் இருந்தால், எவ்வித மாற்றமும் செய்யாமல் தொடரலாம். எஸ்.ஐ.பி., முறையில் முதலீடு செய்பவர்கள், இந்த சரிவின் வாயிலாக குறைந்த விலையில் அதிக யூனிட்டுகளைப் பெற முடியும் என்பதால் முதலீட்டை தொடரலாம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். Image 1648763

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us