UPDATED : டிச 06, 2025 01:35 AM
ADDED : டிச 06, 2025 01:33 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விமானிகளின் புதிய பணி நேர விதிமுறைகளை சமாளிப்பதில் ஏற்பட்ட நெருக்கடி காரணமாக, 'இண்டிகோ' நிறுவனத்தின் விமானச் சேவை பாதிக்கப்பட்டது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட விமானங்களை ரத்து செய்ததால், இந்நிறுவன பங்குகள் கடந்த நான்கு நாட்களில் கடும் சரிவைக் கண்டுள்ளன.
'இண்டிகோவின்' தாய் நிறுவனமான, 'இன்டர்குளோப் ஏவியேஷனின்' பங்குகள், கடந்த நான்கு வர்த்தக தினங்களில், 7.30 சதவீதம் சரிந்துள்ளது. தேசிய பங்குச் சந்தையில், நேற்று மட்டும் இந்நிறுவனத்தின் பங்குகள் 1.27 சதவீதம் சரிந்து, ஒரு பங்கின் விலை 5,367.50 ரூபாயாக இருந்தது.
டிசம்பர் ஒன்றாம் தேதி முதல் இதுவரை, இந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு 16,191 கோடி ரூபாய் குறைந்து, 2.07 லட்சம் கோடி ரூபாயாக வீழ்ச்சியடைந்துள்ளதாக, புள்ளிவிபரங்கள் கூறுகின்றன.

