sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

லாபம்

/

இன்சூரன்ஸ் : ஜி.எஸ்.டி., மாற்றம் அறிமுகமான பின் பாலிசியை புதுப்பித்து கொள்ளலாமா?

/

இன்சூரன்ஸ் : ஜி.எஸ்.டி., மாற்றம் அறிமுகமான பின் பாலிசியை புதுப்பித்து கொள்ளலாமா?

இன்சூரன்ஸ் : ஜி.எஸ்.டி., மாற்றம் அறிமுகமான பின் பாலிசியை புதுப்பித்து கொள்ளலாமா?

இன்சூரன்ஸ் : ஜி.எஸ்.டி., மாற்றம் அறிமுகமான பின் பாலிசியை புதுப்பித்து கொள்ளலாமா?


ADDED : செப் 15, 2025 01:21 AM

Google News

ADDED : செப் 15, 2025 01:21 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடந்த வாரம் நீங்கள் எழுதிய கட்டுரையில், ஆயுள் மற்றும் தனிநபர் மருத்துவ காப்பீட்டு பாலிசிகளின் பிரீமியத்துக்கான ஜி.எஸ்.டி., நீக்கப்பட்டதன் பலன் நமக்கு கிடைக்காமல் போகலாம் என்று தெரிவித்திருந்தீர்கள். நமக்கான பலனை எப்படி பெறுவது?

எந்த அமைப்பிலும், எல்லாருக்கும் நியாயம் கிடைக்கச் செய்வதற்கான கட்டுப்பாடுகள் இருக்கின்றன. வாடிக்கையாளர்களுக்கு அரசு, சட்டம், கட்டுப்பாட்டாளர்கள் என மூன்றும் இணைந்து பாதுகாப்பு அளிக்கின்றன.

செப்டம்பர் 22க்குப் பின், வாடிக்கையாளர்கள் உண்மையில் எவ்வளவு நிவாரணம் பெறுகின்றனர் என்பதை, அரசு தனது இணையதளத்தில், பொருட்களின் விலைப்பட்டியலை வெளியிட்டு காட்டப் போகிறது என்ற அறிவிப்பு வந்துள்ளது.

ஆயுள் மற்றும் தனிநபர் மருத்துவ காப்பீட்டைப் பொறுத்தவரை, ஒவ்வொரு பாலிசி விலையும் ஏற்கனவே கட்டுப்பாட்டாளருக்கு தெரியும்.

ஆகவே ஜி.எஸ்.டி., நீக்கப்பட்ட பின், பழைய பிரீமியம் வசூலிக்கப் படுகிறதா; அல்லது, அதற்கு மேல் வசூலிக்கப்படுகிறதா என்பதை அறிய, ஒரு வசதியை கொண்டு வர வாய்ப்புள்ளது.

காப்பீட்டு பாலிசிகளின் பிரீமியத்துக்கு ஜி.எஸ்.டி., நீக்கப்படுவது, செப்டம்பர் 22 முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த லாபத்தை பெறும் வகையில், 22ம் தேதிக்கு பின், நான் புதிய பாலிசியை வாங்கலாமா? என்னிடம் இருக்கும் தற்போதைய பாலிசியை புதுப்பிப்பதையும் 22ம் தேதிக்கு பின், வைத்துக் கொள்ளலாமா?

ஜி.எஸ்.டி., விலக்கு வழங்கப்படுவதால் பிரீமியத்துக்கான செலவு நிச்சயம் குறையத்தான் செய்யும். ஆனால், '22ம் தேதிக்குப் பின், புதிய பாலிசி வாங்கலாமா?' என்ற கேள்விக்கு பதில் அளிக்க, சில முக்கிய அம்சங்களை பரிசீலிப்பது அவசியம்.

ஜி.எஸ்.டி., விலக்கு செப்டம்பர் 22ம் தேதிக்கு பின், வாங்கப்படும் புதிய/ புதுப்பிக்கப்படும் பாலிசிகளுக்கு மட்டுமே பொருந்தும். இதனால், 18 சதவீதம் வரை சேமிக்கலாம். ஆனால், இதற்கு முன்பு வாங்கப்பட்ட/ புதுப்பிக்கப்பட்ட பாலிசிகளுக்கு, பழைய விதியே தொடரும்.

ஆனால், ஜி.எஸ்.டி., விலக்கு அமலான பின், வாங்கலாம் என நீங்கள் ஒத்தி வைத்தால், இடைப்பட்ட காலத்தில் ஏற்படும் இழப்புகள் மற்றும் செலவுகள், காப்பீடால் பாதுகாக்கப்படாது. அவை ஜி.எஸ்.டி., சேமிப்பால் கிடைக்கும் லாபத்தை விட அதிகமாக இருக்கலாம்.

'சுபஸ்ய சீக்கிரம்' என்று சொல்வர். காப்பீடு என்பது வாழ்க்கை மற்றும் நிதி பாதுகாப்பிற்கான அடிப்படை கருவி. உங்களுக்கோ, குடும்பத்திற்கோ உடனடி பாதுகாப்புக்கு, சில ஆயிரம் ரூபாயை சேமிக்க காத்திருப்பதை விட, உடனடியாக பாலிசி வாங்கிக்கொள்வதே நல்லது.

மேலும், விலக்கு அமலுக்கு வந்த உடனே காப்பீட்டு நிறுவனங்கள் புதிய விகிதத்தை தானாகவே கணக்கில் கொள்வர். நீங்கள் பாலிசியை வாங்க இருக்கும் நிறுவனம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை தெளிவுபடுத்திக் கொள்வது நல்லது. இது புதிய பாலிசி வாங்குவது பற்றியது. இப்போது புதுப்பிப்பது குறித்து பார்ப்போம். உங்கள் மருத்துவ காப்பீடு அல்லது ஆயுள் காப்பீட்டு பாலிசி புதுப்பிப்பு தேதி, 22க்கு பின் இருந்தால், உங்களுக்கு தானாகவே அந்த நன்மை கிடைக்கும்.

ஆனால் புதுப்பிப்பு 22ம் தேதிக்கு முன்பு என்று இருந்தால் என்ன செய்வது? அதை 22ம் தேதிக்கு பின், புதுப்பித்து ஜி.எஸ்.டி., நன்மையைப் பெற முடியுமா என்பதை பார்க்கலாம்...

மருத்துவ காப்பீடு: இதில் சாதாரணமாக 30 நாட்கள் சலுகை காலம் உண்டு. அதாவது, உங்கள் புதுப்பிப்பு தேதிக்கு அடுத்த 30 நாட்களுக்குள், நீங்கள் பிரீமியம் செலுத்தினாலும் பாலிசி புதுப்பிக்கப்படும். ஆனால் கவனிக்க வேண்டியது, அந்த இடைப்பட்ட காலத்தில் எந்த இழப்புகளும் ஈடுசெய்யப்படாது.



ஆயுள் காப்பீடு: இதில் பொதுவாக சலுகை காலத்துக்குள் நீங்கள் பிரீமியம் செலுத்தினால், பாலிசி நன்மைகள் உட்பட ஆயுள் பாதுகாப்பும் இடையூறு இல்லாமல் தொடரும்.

ஆனால், இரண்டு சந்தர்ப்பங்களிலும் ஜி.எஸ்.டி., விலக்கு கிடைக்க வாய்ப்பு குறைவு. ஏனெனில் ஜி.எஸ்.டி., வசூல், நீங்கள் பிரீமியம் செலுத்தும் தேதி அடிப்படையில் அல்ல; புதுப்பிப்பு நோட்டீஸ்/ பிரீமியம் நிலுவைத் தேதி அடிப்படையில் மட்டுமே கணக்கிடப்படும்.

க.நித்யகல்யாணி

காப்பீடு குறித்த நிபுணத்துவ எழுத்தாளர்,

பெருநிறுவன வரலாற்றாசிரியர்






      Dinamalar
      Follow us