sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ இன்சூரன்ஸ்: காப்பீடுகளுக்காக ஒரு 'டேஷ்போர்டு' உருவாக்குங்கள்

 இன்சூரன்ஸ்: காப்பீடுகளுக்காக ஒரு 'டேஷ்போர்டு' உருவாக்குங்கள்

 இன்சூரன்ஸ்: காப்பீடுகளுக்காக ஒரு 'டேஷ்போர்டு' உருவாக்குங்கள்


UPDATED : ஏப் 13, 2026 01:39 AM

ADDED : ஏப் 13, 2026 01:31 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 13, 2026 01:39 AM ADDED : ஏப் 13, 2026 01:31 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதிய நிதியாண்டு தொடங்கிவிட்டது. இது, உங்கள் காப்பீட்டு திட்டங்களை முழுமையாக ஆய்வு செய்து, எல்லாம் சரியாக உள்ளதா என்பதை உறுதிப்படுத்த மிகவும் ஏற்ற காலமாகும்.

முதலில், உங்கள் அனைத்து காப்பீட்டு திட்டங்களையும் - ஆயுள் காப்பீடு, சுகாதாரம், வாகனம், வீடு, தீக்காப்பீடு போன்றவற்றை - ஒவ்வொன்றாக பரிசீலியுங்கள். 2025-26 ஆண்டிற்கான தவணை அல்லது புதுப்பிப்பு கட்டணங்களை நீங்கள் செலுத்தியுள்ளீர்களா என்பதை உறுதி செய்யுங்கள். கட்டண ரசீதுகளை எதிர்கால பாதுகாப்பாக சேமித்து வையுங்கள்.

Image 1562740


கண்காணிக்க முடியும்

காப்பீடு மற்றும் பிற கட்டணங்களின் கால அட்டவணையை கண்காணிக்க, ஒரு சிஸ்டம் இருப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதுவரை நீங்கள் அப்படிப்பட்ட முறையை அமைக்கவில்லை என்றால், ஒரு நோட்டுப் புத்தகம் அல்லது டைரியில் அனைத்து கட்டணத் தேதிகளையும் பதிவு செய்வதிலிருந்து தொடங்கலாம்.

இந்த 'டேஷ்போர்டு' வாயிலாக, அனைத்து தகவல்களையும் ஒரே இடத்தில் வைத்துக் கொண்டு, காலவரையறைகள் மற்றும் கட்டண விபரங்களை எளிதாக கண்காணிக்க முடியும்.

இதனால், வரும் ஆண்டிற்கான அல்லது நீண்டகாலத்திற்கான உங்கள் காப்பீட்டு தேவைகளை முன்கூட்டியே திட்டமிட முடியும்.

இந்த டேஷ்போர்டு நோட்டைப் பயன்படுத்தி, உங்கள் பிற முதலீடுகளையும் கண்காணிக்கலாம். உதாரணமாக, நிரந்தர வைப்பு காலாவதி தேதிகள், மியூச்சுவல் பண்டு எஸ்.ஐ.பி., கட்டணத் தேதிகள் போன்றவற்றையும் இதில் பதிவு செய்யலாம்.

உங்கள் ஒவ்வொரு காப்பீட்டு திட்டத்திலும் உள்ள தொடர்பு தகவல்கள் அப் - டு - டேட் ஆக உள்ளனவா என்பதை சரிபார்க்கவும். சமீபத்தில் முகவரி, கைபேசி எண் அல்லது மின்னஞ்சல்களில் மாற்றம் ஏற்பட்டிருந்தால், பாலிசி எண் குறிப்பிட்டு, தேவையான ஆதாரங்களுடன் காப்பீட்டு நிறுவனத்திற்கு எழுதி மாற்றம் கோருங்கள்.

அதற்கான எழுத்து வாயிலான உறுதிப்படுத்தலை பெற்றுக் கொண்டு அதை பாதுகாப்பாக வைத்திருக்கவும்.

மேலும், ஒவ்வொரு திட்டத்திலும் நாமினி சரியாக பதிவு செய்யப்பட்டுள்ளாரா மற்றும் அவர்களின் விபரங்கள் அப் - டு - டேட் ஆக உள்ளனவா என்பதையும் உறுதி செய்யுங்கள். இது ஆயுள் மற்றும் சுகாதார காப்பீடுகளுக்கு மிகவும் முக்கியமானது. மோட்டார் பாலிசிகளுக்கும் நாமினேஷன் உண்டு.

மதிப்பீடு செய்யலாம்

தேவைப்பட்டால், நாமினேஷனில் மாற்றம் செய்யுங்கள். வாழ்க்கையில் நிகழும் மாற்றங்கள் - திருமணம் போன்றவை - மாற்றத்தை அவசியமாக்கும். இதை நேரத்தில் செய்யாமல் விட்டால், உங்கள் குடும்பத்தினர் பின்னர் தொகையை பெற சிரமப்பட நேரிடலாம்.

உதாரணமாக, நியமனம் செய்யப்பட்ட பிறகு நீங்கள் திருமணம் செய்து கொண்டிருந்தால், பெற்றோர் அல்லது சகோதரர், சகோதரியின் இடத்தில் உங்கள் துணையை நியமிக்க விரும்பலாம்.

இப்போது, காப்பீட்டு திட்டங்களின் உள்ளடக்கத்தைப் பார்ப்போம். உங்கள் ஆயுள் காப்பீடு போதுமானதா என்பதை மதிப்பீடு செய்யுங்கள். தேவையெனில், பல்வேறு திட்டங்களில் இருந்து உகந்தவற்றை தேர்வு செய்து கூடுதல் காப்பீடு எடுக்கலாம்.

ஓய்வூதிய திட்டமாக, ஆண்டு வருமான திட்டம் அல்லது கடன்களுக்கு பாதுகாப்பாக டேர்ம் பாலிசி போன்றவற்றையும் பரிசீலிக்கலாம்.

சுகாதார காப்பீட்டு திட்டங்களையும் ஆண்டுதோறும் மதிப்பாய்வு செய்ய வேண்டும். உங்கள் காப்பீட்டு தொகை போதுமா? கூடுதல் அதாவது டாப் அப் திட்டம் தேவைப்படுகிறதா? விருப்ப கவரேஜ்களை சேர்க்கவோ நீக்கவோ வேண்டுமா?

எளிய வழி

பெற்றோர், துணை, மாமியார், மாமனார், குழந்தைகள் போன்ற குடும்ப உறுப்பினர்களை சேர்க்க வேண்டுமா? அல்லது, பெற்றோர் மறைவு, குழந்தைகள் வேலைக்கு செல்வது போன்ற காரணங்களால், யாரையாவது நீக்க வேண்டுமா என்பது போன்ற கேள்விகளை உங்களிடம் நீங்கள் கேட்டுக் கொள்ளுங்கள்.

முன்னர் கூறிய டேஷ்போர்டு நோட்டை பராமரிப்பதற்கு இன்னும் எளிய வழி ஒன்று உள்ளது - ஆன்லைன் முறையாகும். அதைப் பற்றி அடுத்த கட்டுரையில் பார்க்கலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us