'திருமணமான உடனே இன்சூரன்ஸ் எடுப்பதில் ஆர்வம்' 'பாலிசி பஜார்' புள்ளிவிபர தகவல்
'திருமணமான உடனே இன்சூரன்ஸ் எடுப்பதில் ஆர்வம்' 'பாலிசி பஜார்' புள்ளிவிபர தகவல்
UPDATED : மார் 04, 2026 01:15 AM
ADDED : மார் 04, 2026 01:13 AM

முன்பெல்லாம் குழந்தை பிறந்த பிறகுதான் இன்சூரன்ஸ் எடுக்கும் வழக்கம் இருந்தது. ஆனால், தற்போதைய இளம் வயதினர் திருமணமான உடனேயே தங்களின் நிதித் திட்டமிடலைத் துவங்கி விடுகின்றனர். திருமணமே இன்சூரன்ஸ் எடுப்பதற்கான முக்கிய காரணமாக மாறியுள்ளது என்பது 'பாலிசிபஜார்' வெளியிட்டுள்ள புள்ளி விபரங்களிலிருந்து தெரியவந்துள்ளது. இதேபோல் 'ஹெச்.என்.ஐ.,' என்று சொல்லப்படுகிற, அதிக சொத்து மதிப்புடைய தனிநபர்கள், தங்களின் குடும்ப பாதுகாப்புக்காக 'டேர்ம் இன்சூரன்ஸ்' எடுப்பது கடந்த இரண்டு ஆண்டுகளில் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.
புள்ளிவிபரங்கள்
* கடந்த 5 ஆண்டுகளில் உயர் நிகர மதிப்புடைய தனிநபர்களின் இன்சூரன்ஸ் பங்களிப்பு 200 சதவீதத்துக்கும் மேலாக உயர்ந்துள்ளது
பாலிசி எடுப்பவர்களில் 57 சதவீதம் பேர் 30 முதல் 39 வயதுக்குட்பட்டவர்கள். வருமானம் அதிகரிக்க துவங்கும்போதே பாதுகாப்பை உறுதி செய்கின்றனர்
* சாதாரண வாடிக்கையாளர்கள் சராசரியாக 1 கோடி ரூபாய்க்கு பாலிசி எடுக்கும் நிலையில், வசதி படைத்தவர்கள் 2 கோடி ரூபாய் முதல் 5 கோடி ரூபாய்க்கும் அதிகமான கவரேஜ்ஜை தேர்வு செய்கின்றனர்
ஒட்டுமொத்த 'டேர்ம் இன்சூரன்ஸ்' சந்தை 50 சதவீத வளர்ச்சியை மட்டுமே கண்டுள்ள நிலையில், ஹெச்.என்.ஐ., பிரிவில் மட்டும் ஆண்டுக்கு 45 சதவீத வளர்ச்சி பதிவாகியுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

