உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : செப் 18, 2026 03:17 AM

அ நிறம் | அளவு
முதலீட்டாளர்கள் தினமும் சிறு தொகைகளை மியூச்சுவல் பண்டுகளில் முதலீடு செய்யும் வகையில், புதிய 'தினசரி எஸ்.ஐ.பி.,' திட்டத்தை 'பைசாபஜார்' தளம் அறிமுகப்படுத்தியுள்ளது.
மாதந்தோறும் நிலையான வருமானம் இல்லாத சிறு வணிகர்கள், சுயதொழில் செய்வோர் மற்றும் தினசரி வருமானம் ஈட்டும் தொழிலாளர்கள் தங்கள் வருமானத்துக்கு ஏற்ப எளிதாக முதலீடு செய்வதை நோக்கமாக கொண்டு இத்திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
