
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கனரா ரோபெகோ
மு ம்பையை தலைமையிடமாக கொண்ட கனரா ரோபெகோ சொத்து மேலாண்மை நிறுவனம், 1,326 கோடி ரூபாய் முதலீட்டை திரட்ட, புதிய பங்கு வெளியீடுக்கு வருகிறது. கனரா வங்கி வசமுள்ள 2.59 கோடி பங்குகள், 'ஓரிக்ஸ் கார்ப்பரேஷன் யூரோப்' வசமுள்ள 2.39 கோடி பங்குகள் என, மொத்தம் 4.98 கோடி பங்குகள் விற்பனை செய்யப்பட உள்ளன.
இதற்காக, பங்கு ஒன்றின் விலை 253 -- 266 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. முதலீட்டாளர்கள் வரும் 9ம் தேதி முதல் 13 வரை, குறைந்தபட்சம் 56 பங்குகள் கேட்டு அல்லது அதன் மடங்குகளில் விண்ணப்பிக்கலாம். அக்., 16ல் பங்குகள் சந்தையில் பட்டியலிடப்பட உள்ளன.
டாடா கேப்பிடல்
நேற்று புதிய பங்கு வெளியீட்டுக்கு வந்த முதல் நாளில், டாடா கேப்பிடல் நிறுவனத்தின் பங்குகள் கேட்டு முதலீட்டாளர்களிடம் இருந்து 39 சதவீத விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.