
வீவொர்க் இந்தியா
அ லுவலக பகிர்வு சேவையை வழங்கி வரும் 'வீவொர்க் இந்தியா'வின் பங்குகள், நேற்று சந்தையில் பட்டியலிடப்பட்ட போது, ஆரம்பத்தில் விலையில் பெரியளவில் மாற்றமின்றி துவங்கியது. அதன் பின் கிட்டத்தட்ட 4 சதவீதம் சரிவை கண்டு, வர்த்தக நேர முடிவில், 2.80 சதவீத சரிவுடன், பங்கு ஒன்றின் விலை 632 ரூபாயாக நிலைபெற்றது.
கனரா எச்.எஸ்.பி.சி.,
க னரா எச்.எஸ்.பி.சி., லைப் இன்சூரன்ஸ் ஐ.பி.ஓ.,வில், முதல் நாளான நேற்று 9 சதவீதம் அளவுக்கே விண்ணப்பங்கள் பெறப்பட்டு உள்ளன. ஐ.பி.ஓ., வாயிலாக முதலீட்டாளர்கள் வசமுள்ள 23.75 கோடி பங்குகள் விற்பனைக்கு திட்டமிட்ட நிலையில், பங்கு ஒன்றின் விலை 100 -- 106 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது .
மிட்வெஸ்ட்
தெ லுங்கானாவை சேர்ந்த கிரானைட் ஏற்றுமதியாளரான மிட்வெஸ்ட், 451 கோடி ரூபாய் முதலீட்டை திரட்ட, வரும் 15ம் தேதி புதிய பங்கு வெளியீட்டுக்கு வருகிறது. பங்கு ஒன்றின் விலை 1,014 -1,065 ரூபாயாக நிர்ணயித்து உள்ளது. பங்குகள் கேட்டு விண்ணப்பிக்க 17ம் தேதி கடைசி நாளாகும்.
இன்டிகிரிஸ் மெட்டெக்
டி ல்லியைச் சேர்ந்த மருத்துவ தொழில்நுட்ப நிறுவனமான இன்டிகிரிஸ் மெட்டெக், 4,000 கோடி ரூபாய் முதலீட்டை திரட்ட, ஐ.பி.ஓ.,வுக்கு விண்ணப்பித்து உள்ளது. பங்குதாரரின் 2.16 கோடி பங்குகளுடன், புதிய பங்கு விற்பனை வாயிலாக 925 கோடி ரூபாயை திரட்ட திட்டமிட்டுள்ளது.