
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
'கியூர் புட்ஸ்'
பெ ங்களூரை தலைமையிடமாகக் கொண்டு, 'ஈட்பிட், கேக்ஜோன், கிரிஸ்பிகிரீம்' ஆகிய பிராண்டு பெயர்களில், 'கிளவுட் கிச்சன்' சேவைகளை வழங்கி வரும் கியூர் புட்ஸ், 800 கோடி ரூபாய் முதலீட்டை திரட்ட புதிய பங்கு வெளியீடுக்கு வருகிறது. பங்குதாரர்களின் 4.85 கோடி பங்குகளுடன், புதிய பங்கு விற்பனை வாயிலாக முதலீட்டை திரட்ட திட்டமிட்டுள்ளது.
ஐ.பி.ஓ., வாயிலாக திரட்டப்படும் தொகையில், 152.50 கோடி ரூபாயை புதிய கிளவுட் கிச்சன்களை அமைப்பதற்கும், 126.90 கோடி ரூபாயை, கடன்களை திருப்பி செலுத்தவும்; 92 கோடி ரூபாயை துணை நிறுவனமான 'பேன் ஹாஸ்பிட்டாலிட்டி' நிறுவனத்தில் முதலீடு செய்யவும் பயன்படுத்த உள்ளது.
மேலும், 40 கோடி ரூபாயை, குத்தகை டிபாசிட்டுக்கும், 14 கோடி ரூபாயை சந்தைப்படுத்தல், பிராண்டு மேம்படுத்தலுக்கும் செலவிட உள்ளதாக விண்ணப்பத்தில் தெரிவித்துள்ளது.

