
எக்செல்சாப்ட் டெக்னாலஜிஸ் ரூ.500 கோடியாக குறைப்பு
'சா ஸ்' தொழில்நுட்ப நிறுவனமான 'எக்செல்சாப்ட் டெக்னாலஜிஸ்' புதிய பங்கு வாயிலாக திரட்டும் நிதியின் அளவை, 700 கோடி ரூபாயில் இருந்து 500 கோடி ரூபாயாக குறைத்து அறிவித்துள்ளது. இந்நிறுவனத்தின் ஐ.பி.ஓ., நவ., 19ம் தேதி துவங்கும் நிலையில், நவ., 21ம் தேதி வரை முதலீட்டாளர்கள் விண்ணப்பிக்கலாம். ஐ.பி.ஓ., வாயிலாக திரட்டப்படும் நிதியைக் கொண்டு, மைசூரில் புதிய நிலம் வாங்கி கட்டுமான பணிகளை மேற்கொள்ளவும்; ஏற்கனவே உள்ள நிறுவனத்தில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளவும் பயன்படுத்தப்படும் என தெரிவித்துள்ளது.
பிசிக்ஸ்வாலா நிறுவனம் இறுதி நாளில் வரவேற்பு
க ல்வி தொழில்நுட்ப நிறுவனமான 'பிசிக்ஸ்வாலா'வின் புதிய பங்கு வெளியீட்டில், பங்குகளை விற்க இந்நிறுவனம் நிர்ணயித்திருந்த இலக்கைவிட, 1.12 மடங்கு அதிக விண்ணப்பங்கள் வந்துள்ளதாக தரவுகள் கூறுகின்றன. ஐ.பி.ஓ., வெளியான முதல் இரண்டு நாட்களிலும் பெரிய அளவிற்கு வரவேற்பு இல்லாதிருந்த நிலையில், இறுதி நாளான நேற்று, 20.84 கோடி பங்குகளை வாங்க விண்ணப்பங்கள் வந்துள்ளன.
சிறு முதலீட்டாளர்கள் 86 சதவீதமும்; நிறுவனம் அல்லாத முதலீட்டாளர்கள் 25 சதவீதமும் விண்ணப்பித்துள்ளனர். இந்நிறுவனம், 3,480 கோடி ரூபாய் நிதி திரட்ட திட்டமிட்ட நிலையில், ஒரு பங்கின் விலை, 103 முதல் 109 ரூபாய் வரை என நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.

