
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ரூ.400 கோடி திரட்டுகிறது சிவ்கங்கா டிரில்லர்ஸ்
ம. பி.,யின் இந்துாரை தலைமையிடமாக கொண்டு, எண்ணெய் நிறுவனங்களுக்கு ஒருங்கிணைந்த துளையிடும் சேவைகளை வழங்கி வரும் 'சிவ்கங்கா டிரில்லர்ஸ்' நிறுவனம், 400 கோடி ரூபாய் முதலீட்டை திரட்ட ஐ.பி.ஓ., வருகிறது. முழுதும் புதிய பங்கு விற்பனை வாயிலாக திரட்ட உள்ள நிதியில் 285 கோடி ரூபாயை இயந்திரங்கள் வாங்கவும், 85.50 கோடி ரூபாயை கடனை திருப்பி செலுத்தவும் பயன்படுத்த உள்ளதாக விண்ணப்பத்தில் தெரிவித்துள்ளது.
ரூ.2,342 கோடிக்கு ஷிப்ராக்கெட் ஐ.பி.ஓ.,
டில்லியை தலைமையிடமாக கொண்டு, இ - காமர்ஸ் நிறுவனங்களுக்கு ஒருங்கிணைந்த கூரியர் சேவைகளை அளித்து வரும் 'ஷிப்ராக்கெட்' நிறுவனம், 2,342 கோடி ரூபாய் முதலீட்டை திரட்ட ஐ.பி.ஓ.,வுக்கு வர உள்ளது. இந்நிறுவனத்தின் ஆரம்ப கட்ட முதலீட்டாளர்கள், பங்குகள் விற்பனை வாயிலாக 1,242 கோடி ரூபாயும், புதிய பங்கு விற்பனை வாயிலாக 1,100 கோடி ரூபாயும் திரட்ட உள்ளது.

