UPDATED : ஜூலை 08, 2026 12:21 AM
ADDED : ஜூலை 08, 2026 12:09 AM

புதிய பங்கு வெளியீட்டுக்கு தயாராகும் 'கல்ட் டாட் பிட்'
உடற்பயிற்சி துறையில் செயல்படும் 'கல்ட் டாட் பிட்' நிறுவனம், புதிய பங்குகளை வெளியிட்டு நிதி திரட்ட செபியிடம் வரைவு ஆவணங்களை சமர்ப்பித்துள்ளது. இதன் வாயிலாக 950 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய பங்குகளும், நடப்பு முதலீட்டாளர்களின் 17.86 கோடி பங்குகள் 'ஆபர் பார் சேல்' முறையிலும் விற்பனை செய்யப்பட உள்ளன. இந்த ஐ.பி.ஓ.,வின் மொத்த மதிப்பு 4,000 கோடி ரூபாய் வரை இருக்கலாம் என சந்தை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
திரட்டப்படும் நிதி, புதிய மையங்களை அமைத்தல், குத்தகை கட்டணம் செலுத்துதல், கடன்களை திருப்பி செலுத்துதல் மற்றும் விளம்பர செலவுகளுக்கு பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
'கொச்சின் ஷிப்யார்டு' பங்கு நிறுவன முதலீட்டாளர்கள் வரவேற்பு
பொதுத்துறை நிறுவனமான 'கொச்சின் ஷிப்யார்டு' நிறுவனத்தின் 5.04 சதவீத பங்குகளை (1.32 கோடி பங்குகள்) மத்திய அரசு விற்பனை செய்ய தொடங்கியுள்ளது.
இதன் முதல் நாளான நேற்று நிறுவன முதலீட்டாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட 59.66 லட்சம் பங்குகளுக்கு, 3.52 மடங்கு அதிகமாக, கிட்டத்தட்ட 2.10 கோடி பங்குகளுக்கு விண்ணப்பங்கள் குவிந்துள்ளன. இதன் மதிப்பு மட்டும் கிட்டத்தட்ட 2,900 கோடி ரூபாயை தாண்டியுள்ளது.
இதன் காரணமாக கூடுதல் பங்குகளை விற்க நிறுவனம் முடிவு செய்துள்ளது.
குறைந்தபட்ச பங்கு விலை 1,400 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ள இந்த விற்பனை வாயிலாக, அரசுக்கு 1,800 கோடி ரூபாய் நிதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிறு முதலீட்டாளர்கள் இன்று முதல் இப்பங்குகளுக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
