ADDED : பிப் 05, 2026 01:19 AM
வரும் 9ம் தேதி இரண்டு நிறுவனங்களின் புதிய பங்கு வெளியீடு துவங்க உள்ளது.
ஐ பைனான்ஸ்
சி று, குறு நிறுவனங்களுக்கு கடன் வழங்கும் 'ஐ பைனான்ஸ்' (AYE FINANCE) நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு வரும் பிப்ரவரி 9ம் தேதி துவங்கி 11ம் தேதி நிறைவடைகிறது. இந்நிறுவனம், ஐ.பி.ஓ., வாயிலாக 1,010 கோடி ரூபாய் திரட்ட உள்ளதாகவும், பங்கு ஒன்றின் விலை 122 முதல் 129 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐ.பி.ஓ., வாயிலாக திரட்டப்படும் நிதியை தொழிலை விரிவுபடுத்தவும், மூலதனத்தை அதிகரிக்கவும் பயன்படுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.
பிராக்டல் அனலிட்டிக்ஸ்
செ யற்கை நுண்ணறிவு மற்றும் தரவு பகுப்பாய்வு சேவைகளை வழங்கி வரும் 'பிராக்டல் அனலிட்டிக்ஸ்' நிறுவனம் ஐ.பி.ஓ., வாயிலாக 2,834 கோடி ரூபாய் திரட்ட உள்ளதாக அறிவித்துள்ளது. இந்நிறுவனத்தின் பங்குகளை ஐ.பி.ஓ.,வில் வாங்க பிப்ரவரி 9 முதல் 11ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். ஒரு பங்கின் விலை 857 முதல் 900 ரூபாய் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஐ.பி.ஓ.,வில் திரட்டும் நிதி, புதிய அலுவலகங்கள் அமைக்கவும், ஆராய்ச்சி பணிகளுக்கும், கடன்களை அடைக்கவும் பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
