
டாடா கேப்பிடல்
டா டா குழுமத்தின் நிதி சேவை பிரிவான 'டாடா கேப்பிடல்', 15,500 கோடி ரூபாய் முதலீட்டை திரட்ட, புதிய பங்கு வெளியீடுக்கு வருகிறது. முதலீட்டாளர்கள் வசமுள்ள பங்குகள், புதிய பங்குகள் சேர்த்து, மொத்தம் 47.58 கோடி பங்குகள் விற்பனைக்கு வருகின்றன. இதற்காக, பங்கு ஒன்றின் விலை 310 -326 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. வரும் அக்.6 முதல் 8 வரை, முதலீட்டாளர்கள் பங்குகள் கேட்டு விண்ணப்பிக்கலாம். அக்.13ம் தேதி, இந்நிறுவன பங்குகள் சந்தையில் பட்டியலிடப்பட உள்ளன.
ஆர்டி இண்டஸ்ட்ரீஸ்
ஆந் திராவின் நெல்லுாரை சேர்ந்த, 'ஆர்டி இண்டஸ்ட்ரீஸ்', புதிய பங்கு வெளியீடுக்கு அனுமதி கேட்டு செபியிடம் விண்ணப்பித்து உள்ளது. பழைய பேட்டரியை மறுசுழற்சி செய்து துாய ஈயம், ஈய உலோக கட்டிகள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள இந்நிறுவனம், முதலீட்டாளர் வசமுள்ள 3.76 கோடி பங்குகளுடன், புதிய பங்கு விற்பனை வாயிலாக 320 கோடி ரூபாய் முதலீட்டை திரட்ட திட்டமிட்டு உள்ளது. இதில், 220 கோடி ரூபாய் மூலதனத்தை அதிகரிக்கவும்; 22 கோடி ரூபாய் கடனை திருப்பி செலுத்தவும்; மீதமுள்ள தொகையை நிறுவனத்தின் பிற செலவுகளுக்கும் பயன்படுத்த இருப்பதாக தெரிவித்துள்ளது.
ஷீல்பயோடெக்
டி ல்லியைச் சேர்ந்த 'ஷீல்பயோடெக்' 34.02 கோடி ரூபாய் முதலீட்டை திரட்ட, இன்று புதிய பங்கு வெளியீடுக்கு வருகிறது. வரும் அக்.3ம் தேதி வரை, முதலீட்டாளர்கள் பங்குகள் கேட்டு விண்ணப்பிக்கலாம். இதற்காக, பங்கு ஒன்றின் விலை 59-63 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 15.88 கோடி ரூபாய் மூலதன செலவினங்களுக்கும், 9.12 கோடி ரூபாய் ப்ளூபெர்ரி விரிவாக்கத்துக்கு பயன்படுத்த உள்ளது. வரும் அக்.8ல் இந்நிறுவன பங்குகள் சந்தையில் பட்டியலிடப்பட உள்ளன.