
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்டீம்ஹவுஸ் இந்தியா
'ஸ் டீம்ஹவுஸ் இந்தியா' நிறுவனம், ஐ.பி.ஓ., வாயிலாக, 425 கோடி ரூபாய் நிதி திரட்டுவதற்காக, புதுப்பிக்கப்பட்ட ஆவணங்களை செபியிடம் தாக்கல் செய்துள்ளது. தொழில் துறைக்கு தேவையான நீராவி மற்றும் எரிவாயுவை வினியோகிக்கும் இந்நிறுவனம், 'புதிய பங்கு வெளியீடு' வாயிலாக 345 கோடி ரூபாயும்; 'ஆபர் பார் சேல்' வாயிலாக 80 கோடி ரூபாயும் நிதி திரட்ட செபியிடம் அனுமதி கோரியுள்ளது.
![]() |
ஐந்து நிறுவனங்களுக்கு அனுமதி
பு திய பங்குகள் வெளியிட, ஐந்து நிறுவனங்களுக்கு செபி ஒப்புதல் வழங்கியுள்ளது. 'லீப் இந்தியா, எல்டொராடோ அக்ரிடெக், மோல்பியோ டயக்னாஸ்டிக்ஸ், புட்லிங்க் எப் அண்டு பி., ஹோல்டிங்ஸ் மற்றும் டெக்னோகிராப்ட் வெஞ்சர்ஸ்' ஆகிய நிறுவனங்கள் ஐ.பி.ஓ., வெளியிட அனுமதி பெற்றுள்ளன.


