
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கேபியான் டெக்னாலஜிஸ்
க ட்டுமானம் மற்றும் உட்கட்டமைப்புத் துறைக்குத் தேவையான கம்பி வலைகள் மற்றும் பாறை சரிவு பாதுகாப்பு வலைகளை தயாரிக்கும், 'கேபியான் டெக்னாலஜிஸ்' நிறுவனம் புதிய பங்கு வெளியீடு வாயிலாக 29.16 கோடி ரூபாய் திரட்ட உள்ளது.
இந்நிறுவனத்தின் பங்குகளை ஐ.பி.ஓ., வாயிலாக வாங்க, ஜனவரி 6 முதல் 8ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். ஒரு பங்கின் விலை, 76 முதல் 81 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
திரட்டப்படும் நிதியை கொண்டு இயந்திரங்கள் வாங்க உள்ளதாகவும், அன்றாட மூலதன தேவைகளுக்கும் பயன்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

