
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பங்கு வெளியீட்டுக்கு வருகிறது 'கோகோ கோலா' இந்திய பிரிவு
'கோ கோ கோலா'வின் இந்திய 'பாட்லிங்' பிரிவான ஹெச்.சி.சி.பி., நிறுவனம், இந்த ஆண்டு புதிய பங்கு வெளியீட்டுக்கு வரத் திட்டமிட்டுள்ளது. இந்நிறுவனத்தின் மொத்த மதிப்பு 90,000 கோடி ரூபாயாக இருக்கும் என கணிக்கப்படும் நிலையில், ஐ.பி.ஓ., வாயிலாக 9,027 கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டு வருவதாக தெரிகிறது.
பங்கு வெளியீட்டுக்கான பணிகளை ஒருங்கிணைக்க 'கோட்டக், ஹெச்.டி.எப்.சி., குழுமம், சிட்டி பேங்க்' உள்ளிட்ட முதலீட்டு வங்கிகளை, இந்நிறுவனம் நியமித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

