
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதிய பங்கு வெளியீட்டுக்கு வரும் ஏ.எஸ்.ஜி., கண் மருத்துவமனை
ராஜஸ்தானின் ஜெய்ப்பூரைச் சேர்ந்த, 'ஏ.எஸ்.ஜி.,' கண் மருத்துவமனை, 3,900 கோடி ரூபாய் முதலீட்டை திரட்ட புதிய பங்கு வெளியீடுக்கு வரவுள்ளது.
கிட்டத்தட்ட 30,600 கோடி சந்தை மதிப்பு கொண்ட இந்நிறுவனத்தின் 15 சதவீத பங்குகளை, ஐ.பி.ஓ., வாயிலாக ஆரம்ப முதலீட்டாளர்கள் விற்க இருப்பதாக கூறப்படுகிறது.
நாடு முழுதும் 95 நகரங்களில், 175 கிளைகளை கொண்டுள்ள ஏ.எஸ்.ஜி., கண் மருத்துவமனை, வரும் 2030ம் ஆண்டுக்குள் விரிவாக்கத்துக்கு, தனியாக 2,000 கோடி ரூபாயை செலவிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

