
அவந்தா என்டர்பிரைசஸ் செபியிடம் விண்ணப்பம்
மு ம்பையை தலைமையிடமாக கொண்ட 'அவந்தா என்டர்பிரைசஸ்' நிறுவனம், புதிய பங்கு வெளியிட செபியிடம் அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளது.
முழுதும் ஆபர் பார் சேல் முறையில் ஐ.பி.ஓ., வெளியிடப்பட உள்ளது. ஒரு ரூபாய் முகமதிப்பு கொண்ட, 36,105,578 ஈக்விட்டி பங்குகள் வெளியிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிறுவனம், உயர்தரமான, காலநிலை மாற்றங்களை தாங்கக்கூடிய ஹைபிரிடு விதைகள் குறித்த ஆய்வு, மேம்பாடு மற்றும் வினியோகத்தில் சிறப்பு பெற்றது.
அனுமதி பெற்றது 'போன் பே' நிறுவனம்
'வா ல்மார்ட்' நிறுவனத்தின் ஆதரவுடன் இயங்கும், டிஜிட்டல் கட்டண சேவையை வழங்கும், 'போன்பே' நிறுவனம், பங்கு வெளியீட்டுக்கு வர, செபி அனுமதி வழங்கியுள்ளது. இந்த வெளியீட்டின் வாயிலாக, இந்நிறுவனம் கிட்டத்தட்ட 13,500 கோடி ரூபாய் நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது.
இந்த ஐ.பி.ஓ., முழுதும், 'ஆபர் பார் சேல்' முறையில் வெளியிடப்படுகிறது. 'வால்மார்ட், டைகர் குளோபல், மைக்ரோசாப்ட்' போன்ற முதலீட்டாளர்கள் தங்களிடம் உள்ள போன்பே பங்குகளில் குறிப்பிட்ட அளவில் விற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

