UPDATED : பிப் 04, 2026 01:53 AM
ADDED : பிப் 04, 2026 01:48 AM

ரூ.2,834 கோடி திரட்டும் 'பிராக்டல் அனாலிட்டிக்ஸ்'
மு ம்பையை சேர்ந்த ஏ.ஐ., தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தீர்வுகளை வழங்கி வரும் பிராக்டல் அனாலிட்டிக்ஸ், 2,834 கோடி ரூபாயை திரட்ட, வரும் 9ம் தேதி புதிய பங்கு வெளியீடுக்கு வருகிறது. முன்னர், 4,900 கோடி ரூபாய் திரட்ட இருப்பதாக அறிவித்த நிலையில், தற்போது புதிய பங்கு விற்பனை வாயிலாக, 1,023.5 கோடி ரூபாயும், ஆரம்ப கட்ட முதலீட்டாளர்கள் பங்கு விற்பனை வாயிலாக, 1,810.40 கோடி ரூபாய் என 2,834 கோடி ரூபாயாக குறைத்துள்ளது. வரும் 9 முதல் 11ம் தேதி முதலீட்டாளர்கள் பங்கு கேட்டு விண்ணப்பிக்கலாம்.
ஐ.பி.ஓ., வருகிறது 'டூட் டிரான்ஸ்மிஷன்
'
![]() |
ம ஹாராஷ்டிராவின் அவுரங்கபாதை சேர்ந்த வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பு நிறுவனமான டூட் டிரான்ஸ்மிஷன், ஐ.பி.ஓ., வாயிலாக 2,258 கோடி ரூபாய் முதலீட்டை திரட்ட, செபியிடம் ரகசிய விண்ணப்ப முறையில் விண்ணப்பித்துள்ளது. இந்நிறுவனம் எலக்ட்ரானிக்ஸ் சென்சார்கள், சுவிட்சுகள், ஒயர் உட்பட பல்வேறு வாகன உதிரிபாகங்களை இந்தியாவில் மட்டுமின்றி, ஐந்து வெளிநாடுகளில் சேர்த்து 23 இடங்களில் தயாரித்து, விற்பனை செய்து வருகிறது. பஜாஜ் ஆட்டோ, டி.வி.எஸ்., மோட்டார், ஹோண்டா, ராயல் என்பீல்டு ஆகிய நிறுவனங்கள் இதன் வாடிக்கையாளர்களாக உள்ளன.


