
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
'ஓசோன் ஓவர்சீஸ்'
'நுவாமா' நிறுவனத்தின் முதலீட்டு ஆதரவு பெற்ற, கட்டட அலங்கார உதிரிபாகங்கள் தயாரிப்பில் முன்னணியில் உள்ள 'ஓசோன் ஓவர்சீஸ்' நிறுவனம், புதிய பங்கு வெளியீடு வாயிலாக 1,500 கோடி ரூபாய் வரை திரட்ட திட்டமிட்டுள்ளது.
இதற்கான முதற்கட்ட பணிகளை துவங்கியுள்ள இந்நிறுவனம், ஐ.பி.ஓ.,வை நிர்வகிப்பதற்காக முதலீட்டு வங்கி அதிகாரிகளை நியமித்துள்ளது. திட்டமிட்டபடி பணிகள் நடந்தால், நடப்பு நிதி ஆண்டின் இறுதிக்குள் செபியிடம் டி.ஆர்.ஹெச்.பி., ஆவணங்களை இந்நிறுவனம் தாக்கல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஐ.பி.ஓ., வெளியீட்டின் வாயிலாக கிடைக்கும் நிதியை தொழில் விரிவாக்கத்திற்கு பயன்படுத்த இந்நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது.

