உள்ளடக்கத்திற்கு செல்ல

ஐபிஓ, 'ஏ-ஒன் ஸ்டீல்ஸ் இந்தியா' செப்., 24ல் பங்கு வெளியீடு
ஐபிஓ, 'ஏ-ஒன் ஸ்டீல்ஸ் இந்தியா' செப்., 24ல் பங்கு வெளியீடு
ADDED : செப் 17, 2026 02:42 AM

அ நிறம் | அளவு
தெ ன்னிந்தியாவை சேர்ந்த ஸ்டீல் தயாரிப்பு நிறுவனமான 'ஏ-ஒன் ஸ்டீல்ஸ் இந்தியா' நிறுவனம், பங்கு வெளியீடு வாயிலாக 405 கோடி ரூபாய் நிதி திரட்ட உள்ளது. ஐ.பி.ஓ., வெளியீடு செப்டம்பர் 24ம் தேதி தொடங்கி 28ம் தேதி முடிகிறது.
புதிய பங்குகள் வெளியீடு வாயிலாக 355 கோடி ரூபாயும், ஆபர் பார் சேல் வாயிலாக 50 கோடி ரூபாயும் திரட்டப்பட உள்ளது. ஐ.பி.ஓ.,வில் திரட்டப்படும் நிதியில் 250 கோடி ரூபாய் கடனை திருப்பி செலுத்த பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனம் 'ஸ்பாஞ்ச் இரும்பு, எம்.எஸ்., பில்லெட்ஸ், டி.எம்.டி., கம்பிகள், ஹெச்.ஆர்., சி.ஆர்., காயில்கள்' உள்ளிட்ட ஸ்டீல் பொருட்களை தயாரிக்கிறது. இந்நிறுவன பங்குகள் பி.எஸ்.இ., மற்றும் என்.எஸ்.இ., ஆகிய சந்தைகளில் பட்டியலிடப்பட உள்ளன.
