UPDATED : ஆக 21, 2026 03:46 AM
ADDED : ஆக 21, 2026 03:22 AM

இந்தியாவில் வணிக நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களுக்கு தங்கம், வெள்ளி தொடர்பான ஒருங்கிணைந்த சேவைகளை வழங்கும் தளமாக, 'ஆக்மோன்ட் என்டர்பிரைசஸ்' நிறுவனம் செயல்பட்டு வருகிறது. மார்ச் 31, 2026 நிலவரப்படி, 24 மாநிலங்களில் செயல்படும் இந்நிறுவனம், தங்கம், வெள்ளி கொள்முதல், சுத்திகரிப்பு, புல்லியன் வர்த்தகம், டிஜிட்டல் தங்கம், நகை உற்பத்தி, சர்வதேச விற்பனை மற்றும் தங்கம் சார்ந்த நிதி சேவைகளை வழங்குகிறது. ஆன்லைன் மற்றும் ஆப்லைன் என, இரு வழிகளிலும் செயல்படும் இந்நிறுவனம், நிறுவனங்கள் மற்றும் சர்வதேச வாடிக்கையாளர்களுக்கான விற்பனையை, 'ஆக்மோன்ட் ஸ்பாட்' தளம், தனிநபர்களுக்கான சேவைகளை, 'ஆக்மோன்ட் கோல்டு பார் ஆல்' தளம் மற்றும் ஆப்லைன் சேனல்கள் வாயிலாகவும் வழங்குகிறது.
![]() |
• தங்கம், வெள்ளி கொள்முதல், சுத்திகரிப்பு, புல்லியன் வர்த்தகம், டிஜிட்டல் தங்கம், நகை உற்பத்தி, சர்வதேச விற்பனை மற்றும் தங்கம் சார்ந்த நிதி சேவைகள் என, பல்வேறு பிரிவுகளில் நிறுவனம் செயல்படுகிறது.
• அங்கீகரிக்கப்பட்ட பொருளாதார இயக்குநர் - 2 (ஏ.இ.ஓ., டீ-2) அந்தஸ்து மற்றும் இரண்டு நட்சத்திர ஏற்றுமதி நிறுவன அந்தஸ்து உள்ளிட்ட அங்கீகாரங்களை பெற்றுள்ளது.
• வங்கிகள், இறக்குமதி செய்யப்படும் டோரே பார்கள், மறுசுழற்சி செய்யப்படும் தங்கம் மற்றும் வெள்ளி, நகை ஏலங்கள் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் தங்கம் மற்றும் வெள்ளியை கொள்முதல் செய்கிறது.
• 13 மாநிலங்களில் 20 நேரடி வினியோக மையங்கள் மூலம் தங்கம் மற்றும் வெள்ளியை வினியோகம் செய்கிறது
• இந்நிறுவனத்தின் சுத்திகரிப்பு நிலையங்கள் என்.ஏ.பி.எல்., அங்கீகாரம் பெற்ற ஆய்வகங்களும், இந்தியா குட் டெலிவரி தரச் சான்றிதழும் பெற்றிருக்கின்றன. இவை, தங்கம், வெள்ளி சுத்திகரிப்பு செயல்பாடுகளுக்கு தேவையானதாக இருக்கிறது
• இந்தியாவில் தங்கத்தின் பயன்பாடும் வர்த்தகமும் அதிகமாக இருப்பதால், நிறுவனம் செயல்படும் சந்தையில் மேலும் வளர்ச்சிக்கு வாய்ப்புள்ளது.
இடர்கள்
• தங்கம் மற்றும் வெள்ளியின் விலையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களை நிறுவனம் எதிர்கொள்ள வேண்டியுள்ளது
• இத்தொழிலுக்கு அதிக செயல்பாட்டு மூலதனம் தேவைப்படுகிறது.
• புல்லியன் மற்றும் நகை சந்தைகளில் அதிக போட்டி நிலவுகிறது
• தங்கம், வெள்ளி தொடர்பான விதிமுறைகள், இறக்குமதி வரி மாற்றங்கள் மற்றும் நிலுவையில் உள்ள சட்ட வழக்குகள் நிறுவனத்தின் செயல்பாடுகளை பாதிக்கலாம்
• தங்கம், வெள்ளி சுத்திகரிப்பு, கையிருப்பு மேலாண்மை மற்றும் மூன்றாம் தரப்பு போக்குவரத்து சேவைகளில் செயல்பாட்டு இடர்கள் உள்ளன
• உலக பொருளாதாரத்தில் சரிவு ஏற்பட்டால், நகை உள்ளிட்ட அத்தியாவசியமற்ற பொருட்களுக்கான தேவை குறையலாம்
• அன்னிய செலாவணி மாற்றங்களில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள், இறக்குமதி செலவு மற்றும் சர்வதேச விற்பனையை பாதிக்கலாம்
• நிறுவனத்தின் இணையதளங்கள் மற்றும் வாடிக்கையாளர் தரவுகள் இணையவழி தாக்குதல்களுக்கு உள்ளாகும் அபாயம் உள்ளது
• சில முக்கிய சப்ளையர்கள் மற்றும் வாடிக்கையாளர்களை நிறுவனம் சார்ந்துள்ளது. இவர்களை இழப்பது அல்லது பரிவர்த்தனை அளவு குறைவது செயல்பாடுகளை பாதிக்கலாம்
• தங்கம், வெள்ளியின் தரம் மற்றும் துாய்மையை தொடர்ந்து பராமரிக்க தவறினால், விற்பனை மற்றும் நிறுவனத்தின் நற்பெயர் பாதிக்கப்படலாம்.
கவனம்: முதலீடு செய்யும் முன் விலை மதிப்பீடு, சந்தையின் போக்கு மற்றும் நிறுவன வளர்ச்சியின் நிலைத்தன்மை ஆகியவற்றில், முழுமையான ஆய்வை மேற்கொள்ளவேண்டும். நிறுவனத்தின் அடிப்படை அம்சங்கள், நிறுவனத்தின் செயல்பாட்டு திறன் மற்றும் பங்கின் விலை மதிப்பிடப்பட்ட முறை ஆகியவற்றையும் முதலீட்டாளர்கள் விரிவாக ஆய்வு செய்தே முடிவெடுக்கவேண்டும்.
ஐ.பி.ஓ., ஆரம்ப தேதி : 21-08-2026
ஐ.பி.ஓ., நிறைவு தேதி: 25-08-2026
பட்டியலிடப்படும் சந்தைகள்: என்.எஸ்.இ., மற்றும் பி.எஸ்.இ.,
பட்டியலிடப்படும் நாள்: 31-08-2026 (உத்தேசமாக)
திரட்டப்படும் தொகை : ரூ. 825 கோடி வரை (அதிக பட்ச அளவு ரூபாயில்)
புதிய பங்குகள் வெளியீடு: ரூ. 620 கோடி வரை (அதிக பட்ச அளவு ரூபாயில்)
ஆபர் பார் சேல்: ரூ. 205 கோடி வரை (அதிக பட்ச அளவு ரூபாயில்)
முக மதிப்பு: ரூ.5/-
விலை வரம்பு: ரூ. 750 முதல் ரூ. 788 வரையில்
விண்ணப்பிக்க குறைந்த பட்ச அளவு: எண்ணிக்கை: 19 பங்குகள் தொகை: ரூ. 14,250/-

