தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ ஐபிஓ,அலசல்:இஎஸ்டிஎஸ்., சாப்ட்வேர் சொல்யூஷன் லிமிடெட்

 ஐபிஓ,அலசல்:இஎஸ்டிஎஸ்., சாப்ட்வேர் சொல்யூஷன் லிமிடெட்

 ஐபிஓ,அலசல்:இஎஸ்டிஎஸ்., சாப்ட்வேர் சொல்யூஷன் லிமிடெட்


UPDATED : ஆக 28, 2026 05:02 AM

ADDED : ஆக 28, 2026 12:50 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 28, 2026 05:02 AM ADDED : ஆக 28, 2026 12:50 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

டிஜிட்டல் மாற்றத்தால் கிளவுட் சேவைகளுக்கான தேவை அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவில் வங்கி - நிதி துறை மற்றும் அரசு துறைகள் உட்பட 2,500க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு ஜி.பி.யு., செயலி சேவை, தரவு மையம் மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த சேவைகளை இந்நிறுவனம்வழங்கி வருகிறது. உட்கட்டமைப்பு மற்றும் மென்பொருள் சேவைகள் வாயிலாக நிறுவனங்களின் தகவல் தொழில்நுட்ப செலவுகளை குறைத்து, அவற்றின் கட்டமைப்பு நிர்வாகத்தை இது எளிதாக்குகிறது.

Image 1613455


கவனம்: முதலீடு செய்யும் முன் விலை மதிப்பீடு, சந்தையின் போக்கு மற்றும் நிறுவன வளர்ச்சியின் நிலைத்தன்மை ஆகியவற்றில், முழுமையான ஆய்வை மேற்கொள்ளவேண்டும். நிறுவனத்தின் அடிப்படை அம்சங்கள், செயல்பாட்டு திறன் ஆகியவற்றையும் முதலீட்டாளர்கள் விரிவாக ஆய்வு செய்தே முடிவெடுக்க வேண்டும்.



சிறப்பம்சங்கள்

கிளவுட், டேட்டா சென்டர், மேனேஜ்டு சர்வீசஸ், ஜி.பி.யு.,-அஸ்-எ-சர்வீஸ் மற்றும் மென்பொருட்களை ஒருங்கிணைத்து முழுமையான ஐ.டி., தீர்வுகளை வழங்குகிறது.வங்கி, நிதி மற்றும் காப்பீட்டு துறை, உட்பட பலதரப்பட்ட வாடிக்கையாளர்களை கொண்டுள்ளதுசொந்த தொழில்நுட்ப தளங்கள், ஏ.ஐ., ஜி.பி.யு., மற்றும் முக்கிய காப்புரிமைகளை கொண்டுள்ளது

'சாப்ட்வேர் டெக்னாலஜி பார்க்ஸ் ஆப் இந்தியா' நிறுவனத்துடன் இணைந்த செயல்பாடுகள் மற்றும் மத்திய அரசின் அங்கீகாரம் பெற்ற கிளவுட் சேவை நிறுவனமாக விளங்குதல்

முன்னணி வங்கிகள் மற்றும் பிற பெரும் நிறுவனங்களுடன் வலுவான, நீண்டகால வணிக உறவுகளைக் கொண்டுள்ளது.

இடர்கள்

கிளவுட் நிறுவனங்களின் கடுமையான போட்டியால் விலை நிர்ணயம் பாதிக்கப்படலாம்

சைபர் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் வேகமான தொழில்நுட்ப மாற்றங்கள்அரசு விதிமுறைகளில் ஏற்படும் மாற்றங்கள்

குறிப்பிட்ட சில முக்கிய வாடிக்கையாளர்கள், கூட்டாளிகள் மற்றும் சப்ளையர்களை மட்டுமே அதிகம் சார்ந்திருப்பது டேட்டா சென்டர் விரிவாக்கம் மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டிற்கான அதிக மூலதனச் செலவுகள்பொருளாதார மந்தநிலையால் வாடிக்கையாளர்கள் ஐ.டி., பட்ஜெட்டை குறைத்தால் வருவாய் பாதிக்கப்படலாம்

பெறப்பட்ட கடன்களுக்குச் சொத்துகள் உத்தரவாதமாக வழங்கப்பட்டுள்ளதால், கடனை திருப்பி செலுத்துவதில் தாமதம் ஏற்படுவது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us