sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 11, 2025 ,ஐப்பசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

லாபம்

/

ஐ.பி.ஓ., அலசல் பிசிக்ஸ்வாலா

/

ஐ.பி.ஓ., அலசல் பிசிக்ஸ்வாலா

ஐ.பி.ஓ., அலசல் பிசிக்ஸ்வாலா

ஐ.பி.ஓ., அலசல் பிசிக்ஸ்வாலா


UPDATED : நவ 10, 2025 10:18 AM

ADDED : நவ 09, 2025 10:29 PM

Google News

UPDATED : நவ 10, 2025 10:18 AM ADDED : நவ 09, 2025 10:29 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆலக் பாண்டே என்பவரால் ஐ.ஐ.டி-.,ஜே.இ.இ., மற்றும் நீட் தேர்வுகளுக்கான பவுதீக (Physics) பயிற்சிக்காக 2016-ம் ஆண்டில் யு டியூப் சேனலாக ஆரம்பிக்கப்பட்டு, பின்னர் ஒரு கல்வி தொழில்நுட்ப நிறுவனமாக உருவெடுத்தது.

நொய்டாவில்தலைமையகத்தை கொண்டு செயல்படும் பிசிக்ஸ்வாலா நிறுவனம், இன்று

பல்வேறுபோட்டித்தேர்வுகள், உயர்கல்வி, திறன் மேம்படுத்துதல் மற்றும் வீட்டிலிருந்தே

கற்றுக்கொண்டு வேலைதேடிக்கொள்ளும் அளவிலான திறன் மேம்படுத்துதல்

வகுப்புகள் போன்றவற்றை நடத்தி வருகிறது.

சிறப்பம்சங்கள்

* கல்வி தொழில் நுட்பத்துறையில் பெற்றுள்ள வலுவான பிராண்டு அங்கீகாரம்.
* சிக்கனமான கட்டணத்தில் தரமானபயிற்சிகளை வழங்குவது. இணைய வழி, நேரடி மற்றும் இரண்டும் கலந்த என பல வகைகளிலும் பயிற்சியளித்துவருமானம் ஈட்டுவது.
* இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் இருக்கும் கல்வித்தர இடைவெளியை பூர்த்தி செய்வது.
* பல்வேறு விதமான போட்டித்தேர்வுகள் மற்றும் வகுப்பு நிலைகளுக்கான பன்முக பயிற்சிகளை வழங்கி இந்தியாவில் மிகப்பெரிய அளவிலான வருமானம் கொண்ட நிறுவனமாக திகழ்வது.
* தொடர்ச்சியாக புதுமைகளை அறிமுகப்படுத்துதல் - நவீன வகை கற்பிக்கும் திட்டங்கள் மற்றும் 24x7 சந்தேகம் தீர்த்தல்.



ரிஸ்க்குகள்

* தொடர்ந்து நஷ்டமடைந்து வருவது. நஷ்டம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வந்தாலும்கூட இன்னமும் லாபம் பார்க்கவில்லை.
* பயிற்சி மையங்களை ஒழுங்குபடுத்தும் வகையிலான அரசு சட்டங்களை கடைப்பிடித்தல்/ நடைமுறைப்படுத்துதல் மற்றும் கட்டுப்பாடுகளை எதிர்கொள்ளுதல்.
* அறிவுசார் சொத்துக்களான பயிற்சிக்கான புத்தகங்கள் வேறு நபர்களால் படைப்புத் திருட்டுக்கு ஆளாகுதல் அல்லது வேறு நபர்கள் இவற்றிற்கான உரிமையை கோருதல்.
* போட்டி, தொழில்நுட்ப மாறுதல், தொழிநுட்ப சிக்கல்கள் போன்றவற்றால் செலவினங்கள் அதிகரித்தல் / வருமானம் குறைதல்.
* திறமையான ஆசிரியர்கள் முக்கியம் என்பதால் அவர்கள் பணியில் இருந்து விலகினால் கற்பிக்கப்படும் தரம் பாதிக்கப்படுதல்.
* பெரும்பாலும் நிறுவனரின் தனிப்பட்ட பிராண்ட் இமேஜை நம்பி இருக்கும் வர்த்தகம் மற்றும் மார்க்கெட்டிங்.








      Dinamalar
      Follow us