sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மே 13, 2026 ,சித்திரை 30, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ ஐ.பி.ஓ., துளிகள்

 ஐ.பி.ஓ., துளிகள்

 ஐ.பி.ஓ., துளிகள்


UPDATED : பிப் 18, 2026 12:28 AM

ADDED : பிப் 18, 2026 12:26 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 18, 2026 12:28 AM ADDED : பிப் 18, 2026 12:26 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதிய பங்கு வெளியீடுக்கு திட்டமிடும் 'நேச்சுரல்ஸ்'

ரி லையன்ஸ் நிறுவனத்துடனான பேச்சு பலனளிக்கவில்லை எனில், வரும் 2028ம் ஆண்டுக்குள் புதிய பங்கு வெளியீடுக்கு வர நேச்சுரல்ஸ் திட்டமிட்டுள்ளதாக, அந்நிறுவனத்தின் துணை நிறுவனர் சி.கே.குமரவேல் தெரிவித்துள்ளார்.

முடி திருத்தகம், அழகு நிலையங்கள் தொழிலில் முன்னணியில் உள்ள நேச்சுரல்ஸ் நிறுவனத்துக்கு நாடு முழுதும் சொந்தமாக 900 கிளைகள் உள்ளன. இந்தாண்டு புனே உட்பட பல்வேறு நகரங்களில் 100 சலுான்களை புதிதாக திறக்க திட்டமிட்டு உள்ளது. இந்நிலையில், மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குமரவேல் கூறியதாவது:

கடந்த 2020ல் நேச்சுரல்ஸ் முதல்முறையாக ரிலையன்ஸ் நிறுவனத்துடன் பேச்சு நடத்தியது. அப்போது 51 சதவீத பங்குகளை ரிலையன்ஸ் நிறுவனம் வாங்க முன்வந்ததால் பேச்சு நிறுத்தப்பட்டது. நேச்சுரல்ஸ் 49 சதவீத பங்குகள் மட்டுமே விற்பது என்ற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது. தற்போது நேச்சுரல்ஸ் அவசரப்படவில்லை. மேலும், பிற நிறுவனங்களுடன் பேச்சு நடத்தவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

மொபிலைஸ் ஆப் பங்கு விலை ரூ.75 - 80

கி ளவுட் அடிப்படையிலான மென்பொருள் தீர்வுகளை வழங்கி வரும் மொபிலைஸ் ஆப், புதிய பங்கு வெளியீடு வாயிலாக 20 கோடி ரூபாய் திரட்ட வருகிறது. இதற்காக ஒரு பங்குக்கு 75 - 80 ரூபாய் என, விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

முதலீட்டாளர்கள் பங்குகள் கேட்டு வரும் 23 முதல் 25 வரை விண்ணப்பிக்கலாம். பங்கு வெளியீட்டில், 35 சதவீதம் சில்லரை முதலீட்டாளர்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது.

கவுடியம் ஐ.வி.எப்., பங்கு விலை ரூ.75 - 79

செ யற்கை கருத்தரித்தல் மருத்துவ சிகிச்சைகளை அளித்து வரும் கவுடியம் ஐ.வி.எப், 165 கோடி ரூபாய் முதலீட்டை திரட்ட ஐ.பி.ஓ.,வுக்கு வருகிறது. ஆரம்ப கட்ட முதலீட்டாளர்களின் 95 லட்சம் பங்குகளுடன், 1.13 கோடி புதிய பங்கு விற்பனை வாயிலாக திரட்டுகிறது.

இதை, தொழில் விரிவாக்கம் மற்றும் கடனை திருப்பி செலுத்த பயன்படுத்த உள்ளது. இதற்காக, ஒரு பங்கின் விலை 75 - -79 ரூபாய் என நிர்ணயித்துள்ளது. பங்குகள் கேட்டு முதலீட்டாளர்கள் வரும் 20 முதல் 24 வரை விண்ணப்பிக்கலாம்.

கிளீன் மேக்ஸ் பங்கு விலை ரூ.1,000- - 1,053

மும்பையை சேர்ந்த புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவனமான 'கிளீன்மேக்ஸ் என்விரோ எனர்ஜி', 3,100 கோடி ரூபாய் நிதி திரட்ட வரும் 23ம் தேதி வருகிறது. ஒரு பங்கின் விலை 1,000- - 1,053 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. விண்ணப்பிக்க 25ம் தே தி கடைசி நாளாகும்.

நிறுவன ஊழியர்களுக்கு பங்கு ஒன்றுக்கு 100 ரூபாய் தள்ளுபடி விலையில் ரூ.30 கோடி மதிப்புள்ள பங்குகள் ஒதக்கீடு செய்யப்பட உள்ளன.

பி.என்.ஜி.எஸ்., ரேவா டயமண்ட் பங்கு

ரூ.367 - 386

ம ஹாராஷ்டிராவின் புனேவை தலைமையிடமாக கொண்ட பி.என்.ஜி.எஸ்., ரேவா டையமண்ட் ஜுவல்லரி, 380 கோடி ரூபாயை திரட்ட, வரும் 24ம் தேதி ஐ.பி.ஓ., வுக்கு வருகிறது. இதற்காக, ஒரு பங்கின் விலை 367 -- 386 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஐ.பி.ஓ., வாயிலாக திரட்டும் நிதியை, 15 புதிய கிளைகள் திறக்கவும், கடன் திருப்பி செலுத்தவும் பயன்படுத்த இருப்பதாக விண்ணப்பத்தில் தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us