ADDED : செப் 29, 2025 12:51 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெங்களூரை தலைமையிடமாக கொண்ட உலோக உதிரி பாகங்கள் தயாரிப்பாளரான இண்டோ எம்.ஐ.எம்., ஐ.பி.ஓ.,வுக்கு அனுமதி கேட்டு, செபியிடம் விண்ணப்பித்துள்ளது. முதலீட்டாளர்களின் 12.97 கோடி பங்குகளுடன், புதிய பங்கு விற்பனை வாயிலாக 1,000 கோடி ரூபாய் முதலீட்டை திரட்ட திட்டமிட்டு உள்ளது.
இதில், 720 கோடி ரூபாயை, கடனை திருப்பி செலுத்தவும், மீதமுள்ளவற்ற நிறுவனத்தின் பிற செலவுகளுக்கு பயன்படுத்த உள்ளது. இந்தியா மட்டுமின்றி அமெரிக்கா, பிரிட்டன் சேர்த்து, இந்நிறுவனத்துக்கு 15 ஆலைகள் உள்ளன.