
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
டாடா கேப்பிடல் பங்கு விலை நிர்ணயம்
டா டா குழுமத்தின் வங்கி சாரா நிதி நிறுவனமான டாடா கேப்பிடல், 15,512 கோடி ரூபாய் முதலீட்டை திரட்ட புதிய பங்கு வெளியீடுக்கு வர உள்ளது. இதற்காக, பங்கு ஒன்றின் விலை 310 --326 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. வரும் 6 -8ம் தேதி வரை பங்குகள் கேட்டு விண்ணப்பிக்கலாம். இந்நிறுவன பங்குகள் , அக்., 13ல் சந்தையில் பட்டியலிடப்பட உள்ளன.
ரூ.4,400 கோடி திரட்டுகிறது சிபி இன்பினிட் ஸ்பேசஸ்
சென்னையை தலைமையிடமாக கொண்ட, 'சிபி டெக்னாலாஜிஸ்' நிறுவனத்தின் துணை நிறுவனமான 'சிபி இன்பினிட் ஸ்பேசஸ்' 4,400 கோடி ரூபாய் முதலீட்டை திரட்ட, புதிய பங்கு வெளியீடுக்கு வருகிறது. கடந்த 2000ம் ஆண்டில், முதல் தரவு மையத்தை துவங்கிய இந்நிறுவனம், தற்போது ஆறு நகரங்களில் 14 மையங்களுடன் இயங்கி வருகிறது. நாட்டின் மொத்த சர்வர் திறனில் கிட்டத்தட்ட 19 சதவீதத்தை, சிபி இன்பினிட் ஸ்பேசஸ் கட்டுப்படுத்தி வருகிறது.