
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
லென்ஸ்கார்ட்.காம்
கடைகள் மற்றும் ஆன்லைன் வாயிலாக, மூக்கு கண்ணாடி விற்பனையில் ஈடுபட்டுள்ள லென்ஸ்கார்ட்.காம், புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்கு, செபி அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த 2010ல் துவங்கப்பட்ட, குருகிராமை தலைமையிடமாக கொண்ட இந்நிறுவனத்துக்கு, இந்தியா மட்டுமின்றி, யு.ஏ.இ., சிங்கப்பூர், ஸ்பெயின், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளையும் சேர்த்து, 2,723க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.
முதலீட்டாளர்களின் 13.20 கோடி பங்குகளுடன், புதிய பங்கு விற்பனை வாயிலாக 2,150 கோடி ரூபாய் முதலீட்டை திரட்ட இந்நிறுவனம் திட்டமிட்டு உள்ளது.
ஐ.பி.ஓ., வாயிலாக திரட்டும் தொகையைக் கொண்டு, நேரடி விற்பனை கடைகளை விரிவுப்படுத்தவும்; தொழில்நுட்ப உள்கட்டமைப்பு மற்றும் சந்தைப்படுத்துதலை மேம்படுத்தவும் திட்டமிடப்பட்டு உள்ளது.