
ரூ.482 கோடி நிதி தி ரட்டிய 'மில்கி மிஸ்ட்'
'மில்கி மிஸ்ட்' நிறுவனம், ஐ.பி.ஓ., வெளியீட்டிற்கு முன்னதாகவே, 'ஜாங்சாங் இன்வெஸ்ட்மென்ட்ஸ்' நிறுவனத்திடம் இருந்து கிட்டத்தட்ட 482 கோடி ரூபாய் நிதி திரட்டியுள்ளது. இந்த நிதி திரட்டலில், புதிய மூலதனமாக கிட்டத்தட்ட 357 கோடி ரூபாயும், நிறுவன பங்குகளை விற்றதன் வாயிலாக 125 கோடி ரூபாயும் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திரட்டப்பட்ட நிதி, ஈரோடு மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலையை விரிவுபடுத்தவும், புதிய தயாரிப்புகளுக்கான ஆலைகளை அமைக்கவும், கடன்களை திருப்பி செலுத்தவும் பயன்படுத்தப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிறுவனத்தின் ஐ.பி.ஓ., வெளியீட்டு தேதி குறித்து இதுவரை தகவல் வெளியாகவில்லை.
ரூ.58 கோடி நிதி திரட்டும் 'சிம்கா அட்வர்டைசிங்'
'சி ம்கா அட்வர்டைசிங்' நிறுவனம், ஐ.பி.ஓ., வாயிலாக 31.71 லட்சம் பங்குகள் வெளியிட்டு, 58 கோடி ரூபாய் நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது. 'என்.எஸ்.இ., எமர்ஜ்' தளத்தில் இந்த புதிய பங்குகள் வெளியாகவுள்ளது. திரட்டப்படும் நிதியானது, நிறுவனத்தின் டிஜிட்டல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கும், மூலதன தேவைகளை பூர்த்தி செய்யவும் பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பங்கு விலை : ரூ. 174 முதல் ரூ. 183 வரை
துவங்கும் தேதி : மே 8, 2026
முடியும் தேதி : மே 12, 2026

