தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ஐ.பி.ஓ.,

ஐ.பி.ஓ.,

ஐ.பி.ஓ.,


ADDED : நவ 28, 2026 02:10 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 28, 2026 02:10 AM


Follow on Google
அ நிறம் | அளவு

8 நிறுவனங்களுக்கு

செபி அனுமதி

ஐ.பி.ஓ., வெளியிட்டு நிதி திரட்டுவதற்கு எட்டு நிறுவனங்களுக்கு செபி அனுமதி வழங்கி உள்ளது.

1. ஸ்வதந்த்ரா மைக்ரோபின்

2. ஸ்டெர்லைட் எலக்ட்ரிக்

3. பியூட்டி கராஜ்

4. நோபல் ஹைஜீன்

5. கவுரிக் பேஷன்ஸ்

6. எமரால்டு ஜூவல் இண்டஸ்ட்ரி

7. எம்.பி., ஸ்டீல் (இந்தியா)

8. கட்டாரியா துல்சந்த் பன்னாலால் ஜூவல்லர்ஸ்

‘ஸ்வரா பேபி ப்ராடெக்ட்ஸ்’

பங்கு விலை ரூ.105 – 111

மத்திய பிரதேசத்தை சேர்ந்த ‘ஸ்வரா பேபி ப்ராடெக்ட்ஸ்’ நிறுவனம், குழந்தைகளுக்கான ‘டயபர்’ உள்ளிட்ட பொருட்களை தயாரித்து வருகிறது. இந்நிறுவனத்தின் 800 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்கு வெளியீடு வரும் டிசம்பர் 2ம் தேதி தொடங்கி, 4ம் தேதி முடிவடைய உள்ளது. இந்நிலையில், ஒரு பங்குக்கான விலை வரம்பு 105–111 ரூபாய் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

வாபஸ் பெறப்பட்ட

விண்ணப்பங்கள்

மும்பையை சேர்ந்த ‘பென்டக்கிள் கன்சல்டன்ட்ஸ்’ மற்றும் குஜராத்தை சேர்ந்த ‘பிவிஷல் ஆயில் அண்டு எனர்ஜி’ ஆகிய இரு நிறுவனங்களும், ஐ.பி.ஓ., வெளியிடுவதற்கான விண்ணப்பங்களை திரும்ப பெற்றுள்ளன. இதில், பென்டக்கிள் கன்சல்டன்ட்ஸ் நிறுவனம் கடந்த செப்டம்பர் மாதமும், பிவிஷல் ஆயில் அண்டு எனர்ஜி நிறுவனம் கடந்த மார்ச் மாதமும் விண்ணப்பங்களை தாக்கல் செய்திருந்தன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us