ADDED : நவ 11, 2025 11:47 PM

பைன் லேப்ஸ் - 2.46 மடங்கு விண்ணப்பம்
பை ன் லேப்ஸ் நிறுவன ஐ.பி.ஓ.,வின் கடைசி நாளான நேற்று, பங்குகளை விற்க நிறுவனம் நிர்ணயித்திருந்த இலக்கைவிட 2.46 மடங்கு அதிகமாக விண்ணப்பிக்கப்பட்டிருப்பது புள்ளி விபரங்களில் தெரியவந்துள்ளது.
சிறு முதலீட்டாளர்கள் 1.22 மடங்கும், தகுதிவாய்ந்த நிறுவனங்கள் 4.00 மடங்கும் விண்ணப்பித்துள்ளனர். நிறுவனங்கள் அல்லாத முதலீட்டாளர்கள் பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை.
ஐ.பி.ஓ., வாயிலாக, இந்நிறுவனம் 3,900 கோடி ரூபாய் திரட்ட இலக்கு வைத்துள்ள நிலையில், ஒரு பங்கின் விலை 210 ரூபாய் முதல் 221 ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
ரூ.400 கோடி திரட்டும் 'மணிபால் பேமென்ட்'
'ம ணிபால் பேமென்ட் அண்டு ஐடென்டிட்டி சொல்யூஷன்ஸ்' நிறுவனம் புதிய பங்கு வெளியிடுவதற்காக புதுப்பிக்கப்பட்ட ஆவணங்களை செபியிடம் தாக்கல் செய்து உள்ளது.
புதிய பங்கு வெளியீடு குறித்த முழு தகவலையும் தாமதமாக வெளியிடும் வகையில், ரகசிய முன் - தாக்கல் வழியில் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
ஐ.பி.ஓ., வாயிலாக, இந்நிறுவனம் 400 கோடி ரூபாய் நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது. திரட்டப்படும் நிதியை கொண்டு கர்நாடகா, தமிழ்நாடு, உத்தர பிரதேசம், மஹாராஷ்டிரா, மேற்கு வங்கம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில், கார்டு உற்பத்தி, காசோலை அச்சிடுதல் உள்ளிட்ட வர்த்தகங்களை விரிவுபடுத்த உள்ளதாக அந்நிறுவனம் கூறியுள்ளது.
வரவேற்பு குறைந்த 'பிசிக்ஸ்வாலா'
க ல்வி தொழில்நுட்ப நிறுவனமான 'பிசிக்ஸ்வாலா' நிறுவன ஐ.பி.ஓ., வெளியீட்டின் முதல் நாளில் மிதமான வரவேற்பே கிடைத்துள்ளது. இந்நிறுவன ஐ.பி.ஓ.,வின் மொத்த பங்குகளில் 7 சதவீதம் மட்டுமே விண்ணப்பிக்கப்பட்டுள்ளது தரவுகளில் தெரியவந்துள்ளது.
சிறு முதலீட்டாளர்கள் பிரிவில் 33 சதவீதமும், நிறுவனங்கள் அல்லாத முதலீட்டாளர்கள் பிரிவில் 2 சதவீதம் மட்டுமே விண்ணப்பிக்கப் பட்டுள்ளது.
ஐ.பி.ஓ., வாயிலாக இந்நிறுவனம் 3,480 கோடி ரூபாய் நிதி திரட்ட திட்டமிட்டுள்ள நிலையில், ஒரு பங்கின் விலை 103 ரூபாய் முதல் 109 ரூபாய் வரை என நிர்ணயிக்கப் பட்டுள்ளது.

