உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : ஜூன் 24, 2026 03:06 AM

அ நிறம் | அளவு
ரசாயன பொருட்கள் வினியோக நிறுவனமான, 'உஜின் பார்மா', ஐ.பி.ஓ., வாயிலாக நிதி திரட்ட, செபியிடம் விண்ணப்பம் செய்துள்ளது. இதன்படி, 1.18 கோடி புதிய பங்குகளும், ஓ.எப்.எஸ்., முறையில் 72.82 லட்சம் பங்குகளும் விற்பனை செய்யப்பட உள்ளன.
திரட்டப்படும் நிதியில் 61.70 கோடி ரூபாய் மற்றும் 21.60 கோடி ரூபாயை முறையே, 'அல்ட்ரா அக்ரோ, அல்ட்ரா பார்மா' நிறுவனங்களில் முதலீடு செய்து, அவற்றை துணை நிறுவனங்களாக மாற்ற திட்டமிட்டுள்ளது. மேலும், 25 கோடி ரூபாய் கடன்களை அடைக்க பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் எவ்வளவு நிதி திரட்டப்படும் என்பது குறித்த விபரம் தெரியவில்லை.
