முகவர்களின் கமிஷனை குறைக்கும் முயற்சியில் ஐ.ஆர்.டி.ஏ.ஐ., தீவிரம்
முகவர்களின் கமிஷனை குறைக்கும் முயற்சியில் ஐ.ஆர்.டி.ஏ.ஐ., தீவிரம்
ADDED : டிச 31, 2025 01:08 AM

மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையமான ஐ.ஆர்.டி.ஏ.ஐ., இன்சூரன்ஸ் கமிஷன்களை கட்டுப்படுத்த, புதிய வரைவு விதிமுறைகளை வெளியிட உள்ளதாக, நிதி சேவைகள் துறை செயலர் எம்.நாகராஜூ தெரிவித்துள்ளார்.
இதன் முக்கிய அம்சங்கள்,
* காப்பீட்டு நிறுவனங்கள் தங்கள் முகவர்களுக்கு வழங்கும் கமிஷன் தொகை மிக அதிகமாக இருப்பதாக கருதப்படும் நிலையில், ஐ.ஆர்.டி.ஏ.ஐ.,க்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட உள்ளது.
* கமிஷன் தொகை அதிகமாக இருப்பதால், வாடிக்கையாளர்கள் செலுத்தும் பிரீமியமும் உயருகிறது. இதை குறைப்பதன் வாயிலாக, பாலிசிதாரர்களுக்கு குறைந்த விலையில் காப்பீடு கிடைக்க செய்வதே அரசின் நோக்கம்.
* நிறுவனங்கள் தங்கள் மொத்த வருமானத்தில், குறிப்பிட்ட சதவீதத்திற்கு மேல் நிர்வாகச் செலவு மற்றும் கமிஷன் செலவுகளை செய்யக்கூடாது என்ற விதிமுறை கடுமையாக்கப்படும்.
*வாடிக்கையாளர்கள், இனி தாங்கள் செலுத்தும் பிரீமியத்தில் எவ்வளவு தொகை கமிஷனாகச் செல்கிறது என்பது தெளிவாக தெரியவரும்.
வாடிக்கையாளர்களுக்கு என்ன லாபம்?
* கமிஷன் செலவுகள் குறையும்போது, பாலிசிகளின் விலை குறைய வாய்ப்பு
* நிறுவனங்களின் செலவு குறைவதால், வாடிக்கையாளர்களுக்கு அதிக போனஸ் கிடைக்கும்
காப்பீட்டுத் துறையில் முகவர்கள்
(தோராயமாக)
* மொத்த முகவர்கள் எண்ணிக்கை 49 லட்சத்திற்கும் மேல்
* ஆயுள் காப்பீட்டு முகவர்கள் 28.95 லட்சம்
* பொது காப்பீட்டு முகவர்கள் 6.99 லட்சம்
* மருத்துவ காப்பீட்டு முகவர்கள் 13.05 லட்சம்
முகவர்களுக்கு கமிஷன் எவ்வளவு?
(தோராயமாக)
காப்பீடு வகை அதிகபட்ச கமிஷன்
ஆயுள் காப்பீடு முதல் ஆண்டு பிரீமியத்தில் 30 % வரை
மருத்துவ காப்பீடு தனிநபர் பாலிசிகளுக்கு பிரீமியத்தில் 20 % வரை
பொதுக் காப்பீடு மோட்டார், தீ விபத்து போன்றவற்றில் 20% வரை

