ADDED : மே 19, 2026 01:01 AM

வரும் செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள 'நிப்டி' குறியீட்டு மறுசீரமைப்பில், 'விப்ரோ' வெளியேற்றப்பட் டு, அதற்கு பதிலாக 'பி.எஸ்.இ.,' சேர்க்கப்பட வாய்ப்புள்ளதாக 'குவிடிட்டி அட்வைசர்ஸ்' நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
அதில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
நிப்டி குறியீட்டில் ஒரு பங்கு சேர்க்கப்படும்போது, அதில் 'இண்டெக்ஸ் பண்டு'கள், இ.டி.எப்.,' போன்ற 'பாஸிவ் பண்டு'களில் இருந்து பல மில்லியன் டாலர் முதலீடுகள் வந்து குவியும். அதேபோல, ஒரு பங்கு வெளியேற்றப்படும்போது முதலீடுகள் வெளியேறும்.
அந்த வகையில், பி.எஸ்.இ., பங்குக்கும் 6,148 கோடி ரூபாய் முதலீடுகள் வர வாய்ப்புள்ளது. மறுபக்கம், விப்ரோ பங்கில் இருந்து 1,982 கோடி ரூபாய் முதலீடுகள் வெளியேறக்கூடும்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிப்டி குறியீட்டில் பி.எஸ்.இ., பங்கு சேர்க்கப்படுவதற்கான வாய்ப்பு அதிகமாக இருப்பதால், நேற்றைய வர்த்தகத்தில் பங்கு விலை 3 சதவீதத்துக்கும் மேல் உயர்ந்து 4,134 ரூபாய் என்ற புதிய உச்சத்தை தொட்டது. வர்த்தகம் முடிவில் 4,119 ரூபாயாக உள்ளது. கடந்த ஒரு ஆண்டில் பி.எஸ்.இ., பங்கு கிட்டத்தட்ட 66 சதவீதம் உயர்ந்துள்ளது.
