தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ மொத்த முதலீடா? எஸ்.ஐ.பி.யா?

 மொத்த முதலீடா? எஸ்.ஐ.பி.யா?

 மொத்த முதலீடா? எஸ்.ஐ.பி.யா?


UPDATED : மார் 09, 2026 07:10 AM

ADDED : மார் 09, 2026 12:51 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 09, 2026 07:10 AM ADDED : மார் 09, 2026 12:51 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மி யூச்சுவல் பண்டு முதலீட்டாளர் கேட்கும் கேள்விகளில் ஒன்று, எஸ்.ஐ.பி. வாயிலாக பணம் போடுவது சிறந்ததா? மொத்தமாக 'லம்ப்-சம்' முறையில் போடுவது லாபம் தருமா? என்பது தான். இதற்கு 'இது தான் சரி' என்ற ஒற்றை பதில் சொல்ல முடியாது. ஆனால், இரண்டுமே, மியூச்சுவல் பண்டுகளில் பணம் சேமிப்பதற்கான இரண்டு முக்கியமான வழிமுறைகள். ஒருவருடைய வருவாய், ஒழுங்கு, ரிஸ்க் எடுக்கும் துணிச்சல், சந்தையில் உள்ள நிலவரம் ஆகிய அனைத்தும் சேர்ந்து தான் எந்த அணுகுமுறையைப் பின்பற்றலாம் என்ற முடிவுக்கு வர முடியும்.

எஸ்.ஐ.பி., யாருக்கு? மாதாமாதம் சம்பளம் பெறுவோருக்கு எஸ்.ஐ.பி., மிகவும் சரியானது. அதேபோல், சிறு வயதிலேயே நல்ல சம்பளம் பெறும் இளைஞர்கள், ஏராளமாக செலவும் செய்துவிடுவர். அவர்களுக்கு ஒரு சேமிப்பு ஒழுங்கு வேண்டும் என்றால், எஸ்.ஐ.பி., உகந்தது.

வேலையில் இருந்து ஓய்வு பெற்றவர்கள், தங்கள் சேமிப்புகளை சீராக முதலீடு செய்ய வேண்டும் என்று கருதுவோருக்கும் இது பொருந்தும்.

'லம்ப்-சம்' யாருக்கு? சிறு தொழில், பெருந்தொழில் செய்வோருக்கு. அதாவது, ஒரே சீராக மாதாமாதம் பணம் ஈட்ட முடியாதவர்கள். அவ்வப்போது பெருந்தொகை ஈட்டக்கூடியவர்கள். ஆண்டுதோறும் 'போனஸ்' பணம் பெறுவோரும் இந்த வகையில் முதலீடு செய்யலாம்.

என்ன உத்தி? இரண்டுமே முதலீடு செய்வதற்கு உரிய உத்திகள் தான். அதனால் இரண்டையும் கலந்து பயன்படுத்திக்கொள்வது கூடுதல் வளர்ச்சியையும் லாபத்தையும் தரும்.

உதாரணமாக, ஒருவர் மொத்தமாக ஒரு குறிப்பிட்ட தொகையைச் சேர்த்து வைக்க வேண்டும் என்று விரும்புகிறார் என்று கருதுவோம். அதில் 60 சதவீதத்தை எஸ்.ஐ.பி., வாயிலாக முதலீடு செய்யலாம்.

மீதமுள்ள 40 சதவீத தொகையை, சந்தையில் வீழ்ச்சி ஏற்பட்டு, மியூச்சுவல் பண்டு யூனிட்டுகளும் நல்ல விலையில் கிடைக்கும் போது, 'லம்ப்-சம்' வழியில் போட்டுவைக்கலாம்.

இப்படி செய்வதால், விலை குறையும் போது கிடைக்கும் பலனையும் பெறலாம். அதேநேரம், சீரான முதலீட்டு ஒழுங்கையும் கடைப்பிடிக்கலாம்.

எஸ்.ஐ.பி., சவுகரியங்கள் சந்தையில் எப்போது முதலீடு செய்வது, இது சரியான நேரமா, இன்னும் கொஞ்சம் காலம் காத்திருக்க வேண்டுமா என்றெல்லாம் யோசிக்க வேண்டாம். மாதாமாதமோ, ஏதோ ஒரு சீரான இடைவெளியிலோ முதலீடு செய்துகொண்டே இருக்கலாம்.

சந்தை ஏற்ற இறக்கத்தோடு இருந்து, எஸ்.ஐ.பி., வாயிலாக முதலீடு செய்யும்போது, கூடுதல் யூனிட்டுகள் கிடைக்கும்.

யூனிட்டுகளின் மதிப்பும் சராசரியாக இருக்கும். அதனால் நீண்டகால அளவில் முதலீடு நன்கு பெருகும்.

'லம்ப்-சம்' பலன்கள் பங்குச் சந்தை சரிவில் இருக்கும்போது செய்யப்படும் இதுபோன்ற மொத்த முதலீட்டினால், கூடுதல் யூனிட்டுகள் கிடைக்கும். பின்னர், சந்தை உயரும் போது நல்ல லாபம் பார்க்கலாம்.

சந்தை சரிவைப் பயன்ப டுத்திக்கொண்டு, மொத்த பணத்தையும் ஒரே தவணையில் முதலீடு செய்துவிடலாம். துளித் துளியாக முதலீடு செய்ய காத்திருக்க வேண்டாம்.

கொஞ்சம் கொஞ்சமாக முதலீடு செய்யலாம் என்று நினைக்கும்போது, வேறு ஏதாவது அனாவசிய செலவுகள் வந்துவிடக் கூடும். பணம் கண்ணெதிரே கரைந்துபோய்விடும். 'லம்ப்-சம்' முதலீடு செய்யும்போது அந்த அபாயத்தைத் தவிர்க்கலாம்.

சந்தை அறிவு இரண்டில் எந்த முதலீட்டு முறை சரியானது, எப்போது பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதற்கு, முதலீட்டாள ருக்கு பங்குச் சந்தைப் பற்றிய ஞானம் வேண்டும்.

எந்தெந்த துறைகள் எப்போது சரிவை சந்திக்கு ம், எத்தனை காலத்தில் அவை மீளும், எப்போது முதலீடு செய்தால், பணம் பன்மடங்கு பெருகும் என்ற தெளிவு வேண்டும். அதற்கு பங்குச் சந்தையைத் தொடர்ந்து கவனித்து வருபவராக இருக்க வேண்டும். அப்படிப்பட்டவர்கள், 'லம்ப்-சம்' முதலீட்டு வழியைப் பயன் படுத்திக் கொள்ளலாம்.

ஆனால், இது எல்லோருக்கும் சாத்தியமில்லை. எல்லோரும் பங்குச் சந்தை டைனோசராக இருக்க முடியுமா என்ன? அன்றாடம் செய்யும் பல்வேறு வேலைகள் நடுவே தான் கொஞ்சம் நேரம் ஒதுக்கி, சேமித்திருக்கும் பணத்தை முதலீடு செய்ய முடியும்.

அப்படிப்பட்ட அன்றாடச் சுழலில் சிக்கித் தவிக்கும் நபர்களுக்கு எஸ்.ஐ.பி., தான் ஆபத் பாந்தவன், அனாத ரட்சகன்.

இரண்டு விஷயங்கள் நீங்கள் சொல்வதெல்லாம் சரி. ஆனால், இரண்டு வழிமுறைகளைப் பின் பற்றினால், எதில் கூடுதல் லாபம் கிடைக்கும்? பணம் பன்மடங்கு பெருகும்?

இந்த நீண்டகால வெற்றிக்கு இரண்டு விஷயங்கள் தான் முக்கியமானவை.

அதாவது உங்களுடைய ரிஸ்க் எடுக்கும் சக்தி என்ன என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். நஷ்டமே வரக்கூடாதா? கொஞ்சம் வந்தால் தாங்குவீர்களா? பெரிய நஷ்டமே ஏற்பட்டாலும், காத்திருந்து முதலீடு செய்து, நல்லதொரு புலர்காலைப் பொழுதுக்குக் காத்திருப்பேன் என்கிறீர்களா?Image 1546471

அத்தகைய ரிஸ்க் வலிமைக்கு ஏற்ப பல்வேறு சொத்துகளில் சரியான முறையில் பரவலாக முதலீடு செய்ய வேண்டும். இதற்கு 'அசெட் அலக்கேஷன்' என்று பெயர். பாதி வெற்றி இதில் தான் இருக்கிறது.

மீதி வெற்றி, சரியான மியூச்சுவல் பண்டு திட்டங்களைத் தேர்வு செய்வதில் இருக்கிறது. அதுவும் அத்தகைய பண்டுகளில் நீண்டகாலம் தொடர்ந்து முதலீடு செய்து வரவேண்டும். அவ்வப்போது பணத்தை எடுக்கக் கூடாது. அல்லது வேறொரு பண்டுத் திட்டத்துக்கு மாறவும் கூடாது.

இந்தப் பண்டைவிட இன்னொரு பண்டு நல்ல லாபத்தைத் தருகிறது, மாறிக்கொள்ளுங்கள் என்று ஆசை வார்த்தை சொல்பவர்கள் நிறைய பேர் வருவர். அவர்களுடைய ஆலோசனைகளைக் காது கொடுத்துக் கேட்க வேண்டாம்.

பயிர் செழித்து வளர்வதை விவசாயி எப்படி உவகையோடு பார்த்துக்கொண்டிருப்பாரோ, அதுபோல் நிதானத்தோடு காத்திருக்க வேண்டும். ஒரு நல்ல நாள் வரும். அன்று அறுவடை அமோகமாக இருக்கும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us