தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ நிலைக்குமா இந்த ஏற்றமும் மாற்றமும்? மூன்று நாள் சரிவுக்கு பின் உயர்வு

 நிலைக்குமா இந்த ஏற்றமும் மாற்றமும்? மூன்று நாள் சரிவுக்கு பின் உயர்வு

 நிலைக்குமா இந்த ஏற்றமும் மாற்றமும்? மூன்று நாள் சரிவுக்கு பின் உயர்வு


ADDED : மார் 17, 2026 01:26 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 17, 2026 01:26 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இந்திய பங்குச் சந்தைகள் மூன்று நாள் சரிவுக்கு பின், நேற்று ஒரு சதவீதத்துக்கும் மேல் உயர்ந்தன. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 938 புள்ளிகள் உயர்ந்து 75,502 புள்ளிகளிலும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 257 புள்ளிகள் அதிகரித்து 23,408 புள்ளிகளிலும் நிறைவடைந்தன.

ஆட்டோ, வங்கி மற்றும் எப்.எம்.சி.ஜி., போன்ற உள்நாட்டு சார்ந்த துறைகளில் மேற்கொள்ளப்பட்ட 'வேல்யூ பையிங்' இதற்கு ஆதரவாக இருந்தது. குறிப்பாக. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில், 'அல்ட்ராடெக் சிமென்ட் 4.22 சதவீதம் அதிகரித்தது.

'டிரெண்டு, ஹெச்.டி.எப்.சி., வங்கி, மஹிந்திரா அண்டு மஹிந்திரா, எட்டர்னல், பஜாஜ் பைனான்ஸ், ஐ.டி.சி., டாடா ஸ்டீல், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா ஆகிய நிறுவனங்களும் ஏற்றத்துடன் காணப்பட்டன.

இருப்பினும், மேற்காசிய போரின் நகர்வு, கச்சா எண்ணெய் விலை மற்றும் அன்னிய முதலீடுகள் வெளியேற்றமும் சந்தைகளுக்கு சவாலாகவே தொடர்கிறது. இதனால் இந்த ஏற்றம் நிலைக்குமா என்பதில் சந்தேகமே நிலவுகிறது.

பந்தன் வங்கி 8% சரிவு பந்தன் வங்கி பங்குகள், நேற்று ஒரே நாளில் 10 சதவீதம் சரிந்து 'லோயர் சர்க்யூட்' நிலைக்கு சென்றது. நிறைவில், சற்று மீட்சி அடைந்தாலும், 7.60 சதவீதம் குறைந்து, ஒரு பங்கின் விலை 162.17 ரூபாயாக முடிந்தது. இதற்கு, இவ்வங்கியின் தாய் நிறுவனமான 'பந்தன் பைனான்சியல் சர்வீசஸ்' ஐ.பி.ஓ., வெளியிட முயன்று வருவதால், ஐ.எப்.சி., மற்றும் ஜி.ஐ.சி., போன்ற பெரிய முதலீட்டாளர்கள் வெளியேற இது வழிவகை செய்யும் என்பதே காரணமாக கூறப்படுகிறது. இருப்பினும், தற்போது புரோமோட்டர்கள் 39.74 சதவீத பங்குகளை வைத்திருக்கும் நிலையில், அவற்றை குறைக்க வேண்டும் என்ற ரிசர்வ் வங்கியின் விதிமுறையை நிறைவேற்ற இம்முயற்சி உதவும் என வங்கி தெரிவித்துள்ளது.



ஐ.டி.பி.ஐ., வங்கி 17% வீழ்ச்சி ஐ.டி.பி.ஐ., வங்கி பங்குகள், நேற்று ஒரே நாளில் 17.22 சதவீதம் சரிந்து, ஒரு பங்கின் விலை 76.31 ரூபாயாக சரிந்தது. இதற்கு, இந்த வங்கியின் பெரும்பான்மை பங்குகளை விற்கும் அரசின் திட்டம் ரத்து செய்யப்படலாம் என்ற செய்தி வெளியானதே காரணமாக கூறப்படுகிறது. குறிப்பாக, மத்திய அரசு எதிர்பார்த்த குறைந்தபட்ச விலையைவிட, ஏலம் கேட்ட நிறுவனங்கள் இன்னமும் குறைவாக விலை நிர்ணயித்ததாகவும், இதனால் விற்பனை ஒப்பந்தம் முறிய வாய்ப்புள்ளதாகவும் தெரிகிறது. அதேநேரம், இது, தொடர்பாக மத்திய அரசிடமிருந்து தங்களுக்கு அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வரவில்லை என்றும், பங்கு விற்பனை ரத்து குறித்து தங்களுக்கு தெரியாது என்றும் ஐ.டி.பி.ஐ., வங்கி விளக்கம் அளித்துள்ளது. மத்திய அரசும் எல்.ஐ.சி.,யும் இணைந்து, இந்த வங்கியின் 60.72 சதவீத பங்குகளை விற்க, கடந்த 2022 முதல் முயற்சித்து வருகின்றன.



மார்ச் 13, 2026 அன்னிய முதலீட்டாளர்கள் ரூ.10,716 கோடி விற்பனை உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் ரூ.9,977 கோடி வாங்கியுள்ளனர்



பங்குச் சந்தைகள் வர்த்தகத்தின் இறுதியில் நல்ல மீட்சியை பதிவு செய்துள்ளன. வரும் காலங்களில், ஹார்முஸ் ஜலசந்தியில் ஏற்படும் மாற்றங்களை பொறுத்தே, முதலீட்டாளர்களின் விருப்பங்கள் அமையும்

- வினோத் நாயர், ஜியோஜித் இன்வெஸ்ட்மென்ட்

மத்திய கிழக்கில் நிலவும் புவிசார் அரசியல் பதற்றங்கள் மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வு ஆகியவற்றால், சந்தையில் இன்னும் எச்சரிக்கை உணர்வு நிலவுகிறது. மேலும், அன்னிய முதலீட்டாளர்களின் வெளியேற்றம் மற்றும் நாணய ஏற்ற இறக்கம் ஆகியவை முதலீட்டு ஆர்வத்தை கட்டுக்குள் வைத்துள்ளன

- அஜித் மிஸ்ரா, ரெலிகேர் புரோக்கிங்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us