மீண்டெழும் ஐ.டி., நிறுவன பங்குகள் நிப்டி ஐ.டி., 4% வரை உயர்ந்தது
மீண்டெழும் ஐ.டி., நிறுவன பங்குகள் நிப்டி ஐ.டி., 4% வரை உயர்ந்தது
UPDATED : மே 19, 2026 01:20 AM
ADDED : மே 19, 2026 01:08 AM

பங்கு சந்தையில், கடந்த சில மாதங்களாக கடும் சரிவை சந்தித்து வந்த ஐ.டி., துறை பங்குகள், தற்போது மீண்டு வர தொடங்கியுள்ளன. கடந்த இரண்டு வர்த்தக நாட்களில் மட்டும் நிப்டி ஐ.டி., குறியீடு, 4 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. நேற்றைய வர்த்தக முடிவில் 2.43 சதவீதம் அதிகரித்து, 28,390 என்ற நிலையில் நிறைவடைந்தது.
நடப்பு ஆண்டு தொடக்கம் முதல் 'நிப்டி 50' குறியீடு 9.50 சதவீதம் சரிந்த நிலையில், ஐ.டி., குறியீடு 27 சதவீதம் வரை சரிந்தது. குறிப்பாக, 'எல்.டி.ஐ., மைண்டுட்ரீ (35%), இன்போசிஸ் (31%), ஹெச்.சி.எல்., டெக் (30%) மற்றும் டி.சி.எஸ்., (29%)' ஆகிய முன்னணி நிறுவனங்களின் பங்குகள் பெரும் வீழ்ச்சியை சந்தித்தன. இதனால் ஐ.டி., துறையின் ஒட்டுமொத்த சந்தை மதிப்பு கிட்டத்தட்ட 9 லட்சம் கோடி ரூபாய் வரை சரிந்தது.
திடீர் உயர்வுக்கான காரணங்கள்
*கடும் சரிவு கண்டதால் ஐ.டி., பங்குகள் விலை மிகவும் மலிவாக உள்ளது
* இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத சரிவை சந்திப்பது, ஏற்றுமதி சார்ந்த ஐ.டி., நிறுவனங்களின் டாலர் வருவாயை உயர்த்தும்
* பங்கு திரும்ப பெறுதலுக்கு வரி சலுகை மீண்டும் கிடைத்துள்ளதால், ஐ.டி., நிறுவனங்கள் கூடுதல் விலைக்கு பங்குகளை திரும்ப பெற வாய்ப்பு.
![]() |

