உள்ளடக்கத்திற்கு செல்ல

ஜப்பானில் வட்டி விகிதம் 31 ஆண்டுகளில் இல்லாத உயர்வு
ஜப்பானில் வட்டி விகிதம் 31 ஆண்டுகளில் இல்லாத உயர்வு
ADDED : செப் 19, 2026 04:28 AM

அ நிறம் | அளவு
ஜ ப்பானின் மத்திய வங்கியான 'பேங்க் ஆப் ஜப்பான்' நேற்று, வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் உயர்த்தி, 1.25 சதவீதமாக நிர்ணயித்துள்ளது. இது, கடந்த 31 ஆண்டுகளில் இல்லாத உயர்வாகும். ஏற்கனவே ஐரோப்பிய மத்திய வங்கியும், அமெரிக்க பெடரல் வங்கியும் வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளன.
மேற்காசிய போர், கச்சா எண்ணெய் விலை உயர்வு போன்ற காரணங்களால், சர்வதேச அளவில் பணவீக்க அழுத்தம் காணப்படுகிறது. இதை சமாளிப்பதற்காகவே, மத்திய வங்கிகள் வட்டி விகிதத்தை உயர்த்தி வருவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
